மசூதியை அவமானப்படுத்தியதாக பிரபல பாப் பாடகிக்கு எதிர்ப்பு....!!
மசூதி
முன்பு தனது அழகை பிரதிபலிக்கும்படி புகைப்படம் எடுத்துக் கொண்ட பாப் பாடகி ரிஹான்னாவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது,.
கடந்த சனியன்று இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரபல பாப் இசை பாடகி ரிஹான்னா (25) அபுதாபி சென்றிருந்தார்..
இந்நிலையில் பிரபல புகைப்பட இணையதளத்தில் பகிர்வதற்காக அங்குள்ள உலகின் பெரிய மசூதி என கருதப்படும் ஷேக் சயித் கிராண்ட் மசூதி வாசலில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.கருப்பு நிற உடையில் அவர் மசூதியின் முன் நின்று பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனையறிந்த மசூதி நிர்வாகம் ரிஹான்னாவை மசூதிக்குள் அனுமதிக்காமல், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இதுகுறித்து கூறியுள்ள மசூதி நிர்வாகம்...
நிர்வாகத்திடமிருந்து எந்தவித முன் அனுமதியும் பெறாமல் மசூதியின் புனிதத் தன்மையை களங்கப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதால் அவர் மசூதி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என கூறியுள்ளது.
ரிஹானாவின் இச்செயலுக்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home