குழந்தை
* அவமானப்படுத்தபடும்
குழந்தை குற்றவாளி ஆகிறது.
* கேலி செய்யபடும்
குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
* குறைகூறி
வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
* அடக்கி
வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.
* பாதுகாக்கப்படும்
குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
* ஊக்குவிக்கப்படும்
குழந்தை மனதிடம் பெறுகிறது.
* புகழப்படும் குழந்தை
பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.
* நட்போடு வளரும்
குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
* நேர்மையை கண்டு
வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.
* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு
நன்மை,தீமையை பற்றி சொல்லி
தரவேண்டும்.
** தினமும் அரை மணி
நேரமாவது தந்தை, குழந்தைகளிடம்
நண்பனைப்போல் உரையாடுங்க
1. தன்னைப் பற்றிய
விமரிசனத்தில் வளரும் குழந்தை : மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.
2. பகைமைச் சூழலில்
வளரும் குழந்தை : பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.
3. பயத்தில் வளரும்
குழந்தை : கவலைப்பட கற்றுக் கொள்கிறது.
4. பச்சாத்தாபச் சூழலில்
வளரும் குழந்தை : தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.
5. பொறாமைச் சூழலில்
வளரும் குழந்தை : குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.
6. பாராட்டப்பட்டு
வளரும் குழந்தை : மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.
7. புகழ்ச்சிகளால்
நிறைக்கப்படும் குழந்தை : மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.
8. சகிப்புத் தன்மையில்
வளர்க்கப்படும் குழந்தை : பொறுமையை அணிந்து கொள்கிறது.
9. பிறரால் ஏற்றுக்
கொள்ளப்படும் குழந்தை : பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.
10. உற்சாகப்படுத்தப்படும்
சூழýல் வளர்ந்த குழந்தை :
தானாகக் கற்றுக் கொள்கிறது.
11. முக்கியத்துவம்
கொடுக்கப்பட்ட குழந்தை : குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.
12. பாகுபாடற்ற சூழலில்
வளர்ந்த குழந்தை : நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.
13. நேர்மைச் சூழலில்
வளர்ந்த குழந்தை : உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.
14. பாதுகாப்பான சூழலில்
வளரும் குழந்தை : தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home