27 October 2013

“தமிழ் எழுத்தாளர்களின் கள்ள மௌனம்..!” -சீறுகிறார் ஓவியர் மருது



ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழில்(30.10.13)
ஓவியர் மருதுவின் நேர்காணல் வந்துள்ளது.
அதிலிருந்து ஒரு கேள்வியும் பதிலும்:


கேள்வி: மோடி பிரதமரானால் நாட்டை விட்டு
வெளியேறி விடுவேன் என்று
கன்னட எழுத்தாளர் யு. ஜி.அ அனந்தமூர்த்தி சொல்லியிருக்கிறார்.
ஆனால் இந்துத்துவ எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டுக்கு
கடந்த ஒரு மாதத்தில் மோடி இருமுறை வந்து சென்றுவிட்டார்.
அறிவுத்துறையினர் யாரும் எந்தக்
கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன்?


பதில்: இப்போது மட்டுமல்ல, ஈழத்தில்
இன அழிப்பு நடந்தபோதும்
பல எழுத்தாளர்கள் கள்ள மௌனம் சாதித்தார்கள்.
மிகச் சிலரைத் தவிர பெரும்பான்மையோர்
அருவருப்பான அமைதியைக் கடைப்பிடித்தனர்.


எழுத்தாளர்கள் என்போர்
மொழியைக் கொண்டு பிழைக்கிறார்கள்.
அவர்கள்தான் முதலில்
வினையாற்றியிருக்கவேண்டும்.
மாறாக, சீரழிந்துபோன அரசியல்கட்சிகளைக்
குறை கூறிக்கொண்டே
இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சொல்லப்போனால் அரசியல் கட்சிகளின்
அவலமான சூழல்,
இவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து
ஒதுங்கிக்கொள்ள வசதியாகவும் இருக்கிறது.


யாராவது செய்யட்டும் நாம் பின்வரிசையில் போய்
நின்றுகொள்ளலாம்என்று நினைக்கிறார்கள்.



ஆனால் இவர்கள்தான் எழுத்தாளர்களை
சமூகம் மதிப்பதில்லைஎன்று
மற்ற நேரங்களில் முன்வரிசையில் இடம் கேட்டுப்
புலம்பவும் செய்கின்றனர்
.
மற்ற மாநிலங்களில் எழுத்தாளர்களிடம் உள்ள
சமூகப் பொறுப்பும் ஒற்றுமையும்
தமிழ்நாட்டில் அறவே இல்லை.
(
நன்றி: ஆனந்தவிகடன்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home