நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர்
ா இருப்பியா' என்று திட்டியபடி சென்றார்.. 'என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு' முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார். பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவ்வளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. 'ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானம்மா பத்து ரூபாங்கற' என்றார்... 'பெரியவரே எந்த லோகத்துல இருக்கிங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துர்றது... போங்க பெரியவரே' என்று சொல்ல அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்.
அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக் கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடுப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசாகி பலவருடங்களாகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. அரசின் மலிவு விலை உணவகத்தில் ஏழைக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட ஐந்து ரூபாய் பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன்.
முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிக்கிறீங்க என்று கேட்டேன். நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா இவ்வளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை. என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி. ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்... இதற்கு பெயர் முன்னேற்றமா? அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்.. இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்...
என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம், இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்குப் பேர் முன்னேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்... அவர் பார்ப்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது மனதை கொஞ்சம் நெருடத்தான் செய்தது..
இணையத்தில் கிடைத்த செய்தி..
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home