9 October 2013

இனி இதுதான் உங்க ஹெட் போன்...



இசையை ரசிக்க இன்று உலகில் பல ரசிகர்கள் இருக்கின்றனர், சிலரால் இசை இல்லாமவல் இருக்க முடியாது எனலாம் அந்த அளவுக்கு இசையின் மீது பைத்தியமாய் இருப்பவர்கள் பலர் எனலாம் நண்பரே.

முன்பெல்லாம் இசையை ரசிக்க பெரிய கிராம போன்களில் வைத்து இசையை கேட்டு மகிழந்தார்கள், பிறகு ரேடியோவில் இசையை நமது பெற்றோர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள் அதன் பின்னர் டேப் வந்தது அதில் கேசட் வாங்கி போட்டு கேட்டு மகிழ்ந்தார்கள் பின்னர் டி.வி.டி பிளேயர் வந்தது.

அதிலும் இசையை கேட்டு மகிழ்ந்தார்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மொபைலில் பாட்டு கேட்டு ரசித்தார்கள் தற்போது ஹெட் போனில் பாட்டு கேட்டு ரசித்து வருகிறார்கள் மக்கள் அடுத்ததாக தற்போது வயர்லெஸ் ஹெட்சேட்டும் வந்துவிட்டது நண்பரே.

இதையும் விட அட்வான்ஸாக தற்போது ஒரு சிறிய சிப் வடிவிலான ஹெட் சேட் வந்துள்ளது இதை பார்க்க ஒரு சின்ன சிப் போலவே இருக்கும் இதை புளுடூத்துடன கனெக்ட் செய்து உங்களது காதில் மாட்டிக் கொள்ளலாம்.

மேலும் இது உங்கள் காதில் இருக்கும் போது உங்கள் வாய் அசைவுகளை வைத்தே அடுத்த பாட்டை நீங்கள் மாற்றலாம் ஒரு முறை உங்கள் பல்லை கடித்தால் அடுத்த பாட்டு பாடும், வாயை திறந்தால் பாடல் நின்று விடும்.

இது உங்களது காதில் இருப்பதே தெரியாது அந்த அளவுக்கு மிக நுண்ணியது மேலும் இது நல்ல கிளாரிட்டியான ஒலியை உங்களுக்கு தரக் கூடியது இதோ அந்த ஹெட் சேட்டை நீங்களே பாருங்கள்....

via Nagoorkani.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home