8 October 2013

செக்ஸிற்கு வாடகைக்கு விடப்படும் மெட்ரோ ரெயில் நிலைய கழிப்பறை? படங்கள் இணைப்பு !!





டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை காதல் ஜோடிகளின் உல்லாசத்துக்காக வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விரிவான விசாரணைக்கு மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயிலில் காலியாக செல்லும் பெட்டிகளில் பயணம் செய்யும் காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபடுவது மற்றும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையதளத்தில் பரவி வந்தன.

இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை காதல் ஜோடிகளுக்கு உல்லாசமாக இருக்க வாடகைக்கு விட்டுவருவதாக தகவல்கள் வெளியானது. இதை கண்டுபிடிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செயலில் இறங்கியது.

அதன்படிதொலைக்காட்சி நிருபர் ஒருவர் ரெயில் நிலைய கழிவறையை பராமரிக்கும் ஊழியரை தொடர்பு கொண்டு தனது காதலியுடன் நேரத்தை செலவிடுவதற்காக கழிவறையை வாடகைக்கு கேட்டார்.

இதற்கு ஒப்புக்கொண்ட அந்த ஊழியர், அதற்கு வாடகையாக ரூ.500 தர வேண்டும் என்று நிருபரிடம் கேட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த டெல்லி மெட்ரோ ரெயில்வே நிர்வாகம், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது.

இது குறித்து மெட்ரோ ரெயில்வே கார்ப்பரேஷன் இயக்குனர் அனுஜ் தயால் கூறுகையில், இந்த சி.டி. ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home