4 October 2013

ATM-எச்சரிக்கையாக இருங்கள்



தன்னியக்க பணம் எடுக்கும் இயந்திரத்தில் சில திருடர்கள் புத்திசாதுரியாமாக தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்! இவர்கள் இயந்திரத்தில் படத்தில் காட்டப்பட்டவாறு சில இணைப்புகளை செய்துவிட்டு அதன் சுற்றாடலில் (ஒளிப்பதிவுக்கருவியின் வீச்செல்லைக்குள்) காத்திருப்பார்கள். அங்கே யாராவது சென்று பணம் எடுப்பதற்காக வங்கி அட்டையை உள்ளே செலுத்தி இரகசிய குறியீட்ட்டை அழுத்துவார்கள். அதனை அவர்கள் ஒளிப்பதிவுக்கருவியூடாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீங்களே பணத்திற்காகவும் அட்டைக்காகவும் காத்திருப்பீர்கள். ஆனால் இவை வெளியே வர மாட்டா. நீங்கள் வங்கிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துச்சொல்வதற்காக அங்கிருந்து விலகிவிடுவீர்கள். அந்த இடைவெளியில் அவர்கள் வ்ந்து உங்கள் வங்கி அட்டையையும் தங்கள் இணைப்பையும் எடுத்துச்சென்று, உங்கள் அட்டைமூலமாக உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!

Thank you- Tamil entertainer

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home