9 October 2013

மாய உலகத்திற்குள் மூழ்கி போன மருத்துவம!

எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.

பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

இதற்கு என்ன காரணம் – சி.டி. ஸ்கேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை அதிகமோ, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரம் என்பதாலோ, அதனை பராமரிப்பது கடினம் என்றெல்லாமோ நாம் கருதலாம். ஆனால் உண்மையில், சி.டி. ஸ்கேன்களின் விலை பல ஆயிரங்களைத் தொட்டதற்கு “ஒரு சில மருத்துவர்கள்’ மட்டுமே காரணம்.

ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்தால், அதற்கு 6 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் அதிகபட்சமாக 4 ஆயிரம் வரை சி.டி. ஸ்கேன் மையத்தால், மருத்துவர்களுக்குக் கமிஷனாக அளிக்கப்படுகிறதாம்! உண்மையிலேயே ஒரு சி.டி. ஸ்கேன் செய்ய வெறும் 1,500 ரூபாய் கூட போதுமாம். ஆனால், சி.டி. ஸ்கேனுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கு அளிக்க வேண்டிய கமிஷன் தொகையுடன் சேர்த்துத்தான் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home