9 October 2013

விந்தை உலகில் அதிசய நீர்ப் பாலம் !!




கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம். யெ(ஜெ)ர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா?
யெ(ஜெ)ர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது. இது கிழக்கு மற்றும் மேற்கு யெ(ஜெ)ர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.
1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home