25 November 2013

ஆப்பிள் நிறுவனத்துக்கு 100கோடி டாலரை 30 டிரக்குகளில் 5 சென்ட் காசுகள் கொடுத்து பழிவாங்கியதா சாம்சங்?



ஆப்பிள் நிறுவனத்துக்கு 100கோடி டாலரை 30 டிரக்குகளில் 5 சென்ட் காசுகள் கொடுத்து பழிவாங்கியதா சாம்சங்?
பேஸ்புக் எங்கும் ஒரே பேச்சாக உள்ளது, சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவுப்படி கொடுக்க வேண்டிய 100கோடி டாலரை 5 சென்ட் சில்லறையாக மாற்றி 30 டிரக்குகளில் அனுப்பியுள்ளது என்று. ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல.


1) சாம்சங் நிறுவனம் ஆப்பிள்குக்கு காப்பிரைட் சட்டத்தை மீறியதற்காக தரவேண்டிய தொகையான 1.049பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும் என்பது கடந்த ஆண்டு தீர்ப்பு, தற்போது மேலும் 290 மில்லியன் டாலர்கள் தர கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது வரை சாம்சங் இந்த பணத்தை தரவில்லை இது தொடர்பாக மேலும் வழக்குகள் உள்ளன‌

2) டாலர் நோட்டுகள், சென்ட் காசுகள் அமெரிக்க விதிப்படி கடன்களை அடைக்க பயன்படுத்தலாம் என்றாலும் எந்த வகையில் பணத்தை பெற வேண்டும் என்பதை பணம் பெறுபவர் முடிவு செய்யலாம் என  அமெரிக்காவில் விதி உள்ளது, சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான தகவல் இது.எனவே பணத்தை எப்படி தருவது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் கைகளில் தான் உள்ளதே தவிர, சாம்சங் நிறுவனத்தின் கைகளில் அல்ல.

3) 1.05பில்லியன் டாலரை சென்ட்டாக மாற்றி தரவேண்டுமெனில் 20பில்லியன் டாலர் காசுகள் வேண்டும், ஒரு காசின் எடை 5 கிராம் என்றாலும் கூட இதன் மொத்த எடை ஒரு இலட்சம் டன்கள், இந்த ஒரு இலட்சம் டன்கள் காசை அனுப்ப 18 சக்கரங்கள் உடைய 2800 டிரக்குகள் வேண்டும், இது 30 டிரக்குகளில் ஏற்ற முடியாது.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான தகவல் இது.

4) சாம்சங் நிறுவனம் நூறு கோடி டாலருக்கு சென்ட்டுகளாக மாற்ற வேண்டுமெனில் கடந்த 20 ஆண்டுகளில் வெளியான அத்தனை 5 சென்ட் காசுகளையும் சேகரித்திருக்க வேண்டும், அதை ரகசியமாக செய்ய இயலாது, சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான தகவல் இது. இப்படி சாம்சங் நாணயங்களை சேகரித்ததாக தகவல்கள் இல்லை.

5) இது சென்ற ஆண்டு2012  ஆகஸ்ட் மாதத்தில் ஹியூமர் இணையதளமான paperblog.com ல் கிண்டலுக்காக வெளியானது, சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான தகவல் இது. இதை இந்த ஆண்டு மீண்டும் பலரால் ஷேர் செய்யப்பட்டு பரவுகிறது.

# கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் மட்டுமல்ல, ஃபேஸ்புக்கில் பரவும் எல்லாவற்றையும் உண்மை என்று நம்பக்கூடாது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home