25 November 2013

வழி தவறிய குழந்தைகளுக்கு உதவும் உன்னத மனிதன்..!!!



இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து, வழி தவறி வரும் குழந்தைகளை மீட்டு, உரிய இடத்தில் சேர்க்க உதவும், பால் சுந்தர் சிங்: நான், சென்னையில் உள்ள, 'கருணாலயா' என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர்.

ஒவ்வொரு நாளும், எங்கள் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம் என, பல இடங்களுக்கு செல்வர்.அங்கு, குழந்தைகள் யாரேனும் தனித்து விடப்பட்டுள்ளனரா அல்லது திசை தெரியாமல் அலைகின்றனரா என, பார்ப்பது வழக்கம்.தவறி வரும் சிறுவர்களின், பெற்றோர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைப்பது தான், எங்களின் முதல் வேலை.

கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில், பள்ளியில் படிக்க வைத்து, நாங்களே வளர்க்கிறோம்;தகுதியான வேலை கிடைத்ததும், குடும்ப வாழ்க்கையையும் ஏற்படுத்தி தருகிறோம்.ஒரு சிலர் எங்கும் போக விரும்பாமல், தன்னார்வலர்களாக இங்கேயே இருக்கின்றனர்.

அந்த, இரு புத்த பிட்சு குழந்தைகளுடன் பழகியதில், மேற்கு வங்கத்திலிருந்து வழி தவறிய திபெத்திய குழந்தைகள் எனவும்; மைசூரில் உள்ள ஒரு புத்த மடத்தில், புத்த மத சம்பிரதாயங்கள் மற்றும் வழக்கங்களை கற்று வந்தது பிடிக்காமல், அங்கிருந்து தப்பி, ரயிலில் சென்ட்ரல் வந்ததை கண்டுபிடித்தோம்.

தற்போது, தமிழக காவல் துறையின் உதவியுடன், மேற்கு வங்கத்தில் உள்ள அக்குழந்தைகளின் குடும்பத்தை கண்டுபிடிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இப்படி, இந்தியா மற்றும் பல அண்டை நாடுகளில் இருந்து, வழி தவறி வரும் குழந்தைகளுக்கு வேண்டிய பாதுகாப்பு உதவிகளை செய்வதுடன், அவர்களை பெற்றோரிடம் சேர்க்க முயற்சிக்கிறோம்.

இதுபோன்று, தனியாக தவிக்கும் குழந்தைகளை, எங்கு பார்த்தாலும், எங்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 044-2591 1214.
-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home