நாட்டின் முதல் பெண்கள் வங்கி 19ல் மும்பையில் துவக்கம்
முழுவதும் பெண்களால்
நிர்வாகிக்கப்படும், “பாரதிய மகிளா வங்கி’யை, முன்னாள் பிரதமர்,
இந்திராவின் பிறந்த தினமான, 19ம் தேதி, மும்பையில், பிரதமர், மன்மோகன் சிங்
துவக்கி வைக்கிறார்.
முழுவதும் பெண்களால் நிர்வகிக்கும், மகிளா
வங்கிகள் துவக்கப்படும்; இதற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என,
இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நாட்டின் முதல், மகிளா வங்கியை,
19ம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திராவின் பிறந்த தினத்தன்று, பிரதமர்,
மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார். இந்த விழாவில், நிதி அமைச்சர்,
சிதம்பரம், ஐ.மு., கூட்டணி தலைவர், சோனியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த வங்கிக்கு தலைமையகம், டில்லியில்
இருக்கும். டில்லியில் தேர்தல் நடப்பதால், தேர்தல் நடத்தை விதி அமலில்
உள்ளது. இதனால், மும்பையில் துவக்கப்படுகிறது. மும்பையைத் தொடர்ந்து,
கோல்கட்டா, சென்னை, ஆமதாபாத், கவுகாத்தி உட்பட ஏழு இடங்களின், மகிளா
வங்கியின் கிளைகள் துவக்கப்படும்.
இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குனராக, உஷா அனந்தசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு
முன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குனராக இருந்தார்.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home