13 November 2013

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் கேடயமாக இருந்தது முஸ்லிம்களது இராணுவம்.



இன்றைய அமெரிக்க யூத இராணுவ முன்னெடுப்புகளில் எமது முஸ்லிம் இராணுவங்கள் கற்றவேண்டிய பாடங்கள்!

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் கேடயமாக இருந்தது முஸ்லிம்களது இராணுவம். அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றில் மேற்கொண்டதன் பயனாகவே மதீனாவில் நிறுவிய இஸ்லாம் மிகப்பெரும் இரு பேரரசுகளான ரோம் மற்றும் பாரசீகத்தை தோற்கடிக்கும் சக்தியை பெற்று இஸ்லாத்தை நிலைநிறுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கியது என்பது எமது வீரவரலாறு.

ஆனால் இன்று எமது உம்மத்தினது இராணுவம் 4.7 மில்லியனாக, "அமெரிக்க, ரஷ்ய மற்றும் இந்திய இராணுவங்களின் தொகையிலும் அதிகமாக இருந்துகொண்டு" எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது? அது இஸ்லாத்தின் எழுச்சியிலும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் இன்று நாம் இழந்துள்ள கிலாபத அரசை நிறுவுவதிலும் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

நிச்சயமாக, இன்றைய எமது முஸ்லிம் இராணுவம் தமது தேசிய எல்லைக்கு அப்பால் இணைந்து தமது அமானிதமான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்து இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுவுவதில் பங்களிப்பு செய்யும் அதி உன்னத காலத்தில் உள்ளது.

இன்றுள்ள துர்பாக்கியமான நிலை யாதெனில் இன்றுள்ள முஸ்லிம் தலைமைகளால் தங்களது சொந்த நலனுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் தொழிற்பட்டு இன்று முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய முஸ்லிம் இராணுவங்கள் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களையும் கொன்று குவிக்கும் கொடூர நிலைக்கு அவர்களது போக்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து எமது சகோதர இராணுவத்தினை மீட்டெடுப்பதற்கு நாம் பொறுப்புடனும் பக்குவமாகவும் தஃவத் கொடுத்து அவர்களை இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலன்களின் பக்கம் மீட்கவேண்டும்.

அத்துடன் இஸ்லாம் மீண்டும் ஒரு வல்லரசாக மாற்றப்படுவதிலும் குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்து துறைகளில் அமுலாக்கப்படுவதிலும் பாரிய பங்களிப்பை கோரி அவர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இன்றைய முஸ்லிம் சகோதர சகோதரிகளிக்கு பாரிய பொறுப்புள்ளது.

சிந்திப்போம்! எமது முஸ்லிம் இராணுவ துஸ்பிரயோகத்தைக களைய ஆக்கபூர்வமான தஃவா முன்னெடுப்புக்களை முஸ்லிம் நாடுகளில் வழங்க உழைப்போம்! இஸ்லாம் ஒரு சுபபவராக இன்றைய முதலாளித்து தலைமைத்துவத்தின் மாற்றீடாக உலக மக்களது மீட்சியாக மலர உழைப்போம்!

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home