15 November 2013

வால்வோவில் ஏறினால்… இறங்கும் வaரை வாழ்வோ, சாவோ.. உறுதியில்லை!

வால்வோ பஸ்கள் வந்த புதிதில் அதில் ஏறிப் பயணிப்பதே பெரும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் இன்று அடுத்தடுத்து வால்வோ பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து உயிர்களைக் குடிக்க ஆரம்பித்திருப்பாதல் இதில் ஏறிப் பயணிக்கவே மக்கள் அஞ்சும் நிலை வந்து விட்டது.
ஆந்திராவில் ஒரு வால்வோ பேருந்து சமீபத்தில் தீக்கிரையாகி 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் குடித்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஒரு பேருந்து தீக்கிரையாகி 7 பேரை பலி வாங்கியுள்ளது.
வால்வோ பேருந்துகள் இத்தனைக்கும் சிறப்பான வசதிகளைக் கொண்ட அதி நவீனப் பேருந்துகள்தான். அப்படி இருந்தும் எப்படி இப்படி அடுத்தடுத்து விபத்துக்கள் நடக்கின்றன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனம்தான் இந்த சொகுசுப் பேருந்துகளைத் தயாரிக்கிறது. கோத்தன்பர்க்தான் இதன் தலைமையகமாகும்.
வால்வோ நிறுவனம்தான் உலகிலேயே மிகப் பெரிய பஸ் தயாரிப்பு நிறுவனமாகும். பயணிகளின் சொகுசான பயணத்தை உறுதி செய்வதே தங்களது கொள்கை என்பது வால்வோவின் வாசகமாகும்.
உலகின் பல நாடுகளிலும் வால்வோ பேருந்துகள்தான் அதிகம் புழங்குகின்றன. ஐரோப்பா, வடக்கு, தெற்கு அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் வால்வோ பிரபலமாக உள்ளது.
வால்வோ பேருந்துகள் 13.8 மீட்டர் நீளம் கொண்டது. முழுப் பேருந்தும் சொகுசான வசதிகளுடன் கூடியது.
இந்தப் பேருந்துகள் நீண்ட தூரப் பயணம் சிறப்பாகவும், சொகுசாகவும் இருக்கும் வகையில், மல்ட்டி ஆக்ஸில் கொண்டவையாகும்.
முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்தப் பேருந்துகள் முழுமையான ஏர் சஸ்பென்சன், முன்புறம் 2 ஏர் பெல்லோஸ், பின்புறம் 6 ஏர் பெல்லோஸ் கொண்டவையாகும்.
பேருந்தில் மொத்தம் 53 அதி சொகுசான வசதியான இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல பேருந்தின் உட்புற அலங்காரமும் ஜோராக இருக்கும். ஹை டெக் பயணிகள் சீட்கள், கார்பெட்டுகள், எல்சிடி டிவிகள் என பயணிகள் வசதியாக பயணிக்கக் கூடிய வகையில் உள்ளன.
பேருந்தின் வலதுபுறம் அவசர கால கதவும் பொருத்தப்பட்டுள்ளது. ஆபத்து நேரிடும்போது அதன் வழியாக செல்லக் கூடிய வகையில் இந்தக் கதவு உள்ளது.
அதேபோல பேருந்தின் ஜன்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் நல்ல வலுவானவை.
பேருந்தின் முன்புற பேனல், டிரைவர் சாலையைத் தெளிவாகப் பார்க்கக் கூடிய வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துக்கு்ம் கவர்ச்சியூட்டும் வகையிலான முகப்பையும் கொண்டுள்ளது.
பயணிகளின் சீட்டுக்கு அடியில் 10 கியூபிக் மீட்டர் அளவுக்கு பொருட்களை வைத்துக் கொள்ள இட வசதியும் உள்ளது.
இந்தப் பேருந்தானது, 340 குதிரை சக்தியும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தக் கூடியதுமான வால்வோ டி9பி என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இது டர்போசார்ஜர் மற்றும் இன்டர் கூலருடன் கூடியது. ஈரோ 3 சான்றும் பெற்றது.
இப்படி பல மேம்பாடுகளுடன் கூடியதாக இருந்தும் கடந்த 15 நாட்களில் 2 மிகப் பெரிய விபத்துக்களை வால்வோ பேருந்துகள் சந்தித்துள்ளன.
இன்னும் சற்று ஆழமாக பார்த்தால், இந்த மூன்று விபத்துக்களிலும் ஏதோ ஒரு வகையில் பெங்களூருடன் தொடர்புடையவையாக உள்ளன.
இந்த மூன்று பேருந்துகளின் விபத்துக்களுக்கும் டிரைவர்களின் அஜாக்கிரதை பொதுவான காரணமாக கூறப்பட்டாலும் கூட பெங்களூரிலிருந்து கிளம்பிய அல்லது பெங்களூரைத் தொட்ட பிறகுதான் மூன்று பேருந்துகளிலுமே விபத்து நடந்துள்ளது யோசிக்க வைப்பதாக உள்ளது.
முதல் விபத்து 2 வாரங்களுக்கு முன்பு நடந்தது. பெங்களூரிலிருந்து ஹைதராபாத் போன வால்வோ பேருந்து, ஆந்திர மாநிலம் மகபூப் நகரில் தீக்கிரையானது. இதில் 45 பேரும் உயிரிழந்தனர். டிரைவர் உள்ளிட்ட 5 பேர் மட்டும் உயிர் தப்பினர். டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது இதற்குக் காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஹவேரியில் இன்னொரு விபத்து நடந்துள்ளது. அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பேருந்து பெங்களூரிலிருந்து மும்பை சென்று கொண்டிருந்த பேருந்தாகும்.
இந்த தொடர் விபத்துக்களால் கவலை அடைந்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், வால்வோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், இந்த விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய ஆட்டோமோட்டிவ் டெஸ்ட்டிங் மற்றும் ஆய்வு திட்ட அமைப்பையும் அது கேட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வால்வோ நிறுவனமும் தனியாக விசாரணையில் இறங்கியுள்ளது. ஸ்வீடன் தலைமையகத்தில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன்இந்த விசாரணை நடந்து வருகிறதாம்.
நன்றி : ஒன் இந்தியா
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home