12 November 2013

முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்ப்பது நபிவழியாகும்




முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்ப்பது நபிவழியாகும்.

இன்ஷாஅல்லாஹ் தமிழகத்தில் வரக்கூடிய 14.11.2013 மற்றும் 15.11.2013 தேதிகளில் (வியாழன் மற்றும் வெள்ளி) ஆஷூரா நோன்பு நோற்க வேண்டும்.

ஆஷூரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

-----------------------------------------------------------------------------------

முஹர்ரம் மாதமும் மூடநம்பிக்கையும்

ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நபிமொழிகள் சிறப்பித்துக்­ கூறுகின்றன. ஆனால் முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாக எண்ணுகின்றனர்,

நபிகளாரின் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்கள் இம்மாதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதால் இம்மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என்று எண்ணுகின்றனர்,

திருமணம் செய்யக்கூடாது, உடலுறவு கொள்ளக்கூடாது, அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று நம்பி அல்லாஹ் அனுமதித்த பல செயல்களைத் தடைசெய்து கொள்கின்றனார்.

இன்னும் சிலர் தங்கள் சோகத்தை ­ வெளிப்படுத்தும் வகையில் ஆயுதங்களால் தங்களைக் காயப்படுத்திக் கொள்கின்றனர்.

துன்பம் வரும்போது பொறுமையை மேற்கொள்வதும் இறைவன் ஏற்படுத்திய விதியை ஏற்றுக் கொள்வதும் இறை நம்பிக்கையாளனின் கடமையாகும்.

துயரத்தின்போது அதிகபட்சமாக மூன்று நாட்கள் துக்கமாக இருக்க நபிகளார் அனுமதித்துள்ளார்கள். அதற்கு மேல் துக்கமாக இருக்க எவருக்கும் அனுமதியில்லை என்று நபிகளார் எச்சரித்தும் உள்ளார்கள்.

இந்த எச்சரிக்கையை மீறி ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட நபித்தோழருக்காக ஒவ்வொரு வருடமும் துக்கநாள் கொண்டாவது இஸ்லாமிய மரபுக்கு முற்றிலும் முரணானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழார்கள், தோழியர்கள் இறந்துள்ளனார், கொல்லப்பட்டுள்ளனார். இவார்களுக்காக நபிகளார் ஒவ்வொரு வருடமும் துக்கநாள் கொண்டாடியது இல்லை. ஏன் அல்லாஹ்வின் தூதர் இறந்ததற்காகக் கூட நாம் துக்கநாள் கொண்டாடாத போது ஹுஸைன் (ரலி) அவார்கள் கொல்லப்பட்டதற்காக வருடா வருடம் துக்கநாள் கொண்டாடுவது என்ன நியாயம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூஸா (அலை) அவார்களைக் கொடுங்கோலன் பிர்அவ்னிடமிருந்து முஹர்ரம் மாதத்தில் அல்லாஹ் காப்பாற்றினான். இதற்காக முஹர்ரம் ஒன்பது, பத்தாம் நாட்களில் நபிகளார் நோன்பு நோற்கக் கட்டளையிட்டனர். அந்த நோன்புகளைக் கடைப்பிடித்து உண்மையான நபிவழியைப் பின்பற்றுவோம்.

-
தீன்குலப் பெண்மணி

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home