11 November 2013

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா ?




உலகளாவிய அளவில் இஸ்லாம் அசுர வளர்ச்சி அடைந்து வருவதை எண்ணி பொறுக்க முடியாத ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும், இஸ்லாத்தில் பெண்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று தமது பொய்யுரைகளை நெடுங்காலமாக பரப்பி வருகின்றனர்.

இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை எனவும், இஸ்லாம் தீவிரவாதத்தை வேரோடு அழித்து வருகிறது என்றும் பார்த்து வருகிறோம்.

அத்துடன் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை போல் உலகில் எந்த மதமும், சித்தாந்தமும் பெண்களுக்கு வழங்கவில்லை.

பெண்களுக்கு மறுமணம், விவாகரத்து உரிமை, சொத்துரிமை என அனைத்து உரிமைகளையும் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கிவிட்டது.

ஆனால் இஸ்லாத்தின் தனித் தன்மைகளை உலகுக்கு சொல்லாத ஊடகங்கள், இஸ்லாமிய பெண்கள் வீட்டில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.

இதோ நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு....

காவல்துறை அதிகாரியாகவும், ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும், மருத்துவராகவும், அரசியல் வாதியாகவும், விமான ஓட்டுனராகவும் இருப்பதை காணமுடிகிறது

இது வெறும் டிரையலுக்காக தான்... இதே போல் ஒவ்வொரு வரலாற்றையும் முன் வைத்தால் முகநூலில் பக்கங்கள் நிறைந்து விடும்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home