முகத்தின் கருமையை போக்கும் இயற்கை வழிகள்.
முட்டை : முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது தேன் சேர்த்து
கலந்து, முகத்தில்
தடவி நன்கு காய வைத்து, பின்
குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
பப்பாளி : பப்பாளியும்
கரும்புள்ளியைப் போக்கும் பொருட்களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை
மசித்து, அதில் பால்
மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வேண்டும்.
கடலை மாவு
: கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது
தேனையும் சேர்த்து, முகத்திற்கு
மாஸ்க் போட்டால், இயற்கையாகவே
கரும்புள்ளிகள் போய்விடும்.
கற்றாழை :
கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து
கழுவினால், நாளடைவில்
கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.
வேப்பிலை :
வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால்
துடைத்தால், கரும்புள்ளிகள்
போய்விடும்.
சந்தனம் :
சந்தனப் பொடியில், சிறிது
மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர்
ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு
தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பட்டை :
பட்டையை பொடி செய்து, அதில் தேன்
ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட
பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும்
நல்ல பலன் கிடைக்கும்.
பாதாம் :
பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல்
அரைத்து, முகத்தில்
தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச
வேண்டும்.
டூத்
பேஸ்ட் : கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென்மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டனால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில்
கழுவினால், சருமத்துளைகளில்
உள்ள அழுக்குகள் வெளியேறுவ தோடு, சருமத்துளைகளும் மூடிக் கொள்ளும்.
ஆலிவ்
ஆயில் : 5-6 டீஸ்பூன்
ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன்
உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்
தில் தடவி 10 நிமிடம்
மசாஜ் செய்து, பின்
ஆவிப்பிடித்து, ஈரமான
துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள்
எளிதில் நீங்கி விடும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home