1 November 2013

'ஆபாசம் நின்று கொல்லும்’





இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு நிலைமை என்ன? திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது.

திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது.

இதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி -தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது.

இன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது.

ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள்.

இங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை.

ஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள்? இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள்.

ஏன் முடியாது? ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது?
.
மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.
மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம்.

.
நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.
திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம்.

.
இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு.

இன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா?

உங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான்.

ஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது.

முதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன் -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம்.

நாமே இதற்குப் பலியாகி விட்டோமே! குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே! அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்?

மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.

நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா?

ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.

பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.
அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம்.

அடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்?நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை.

மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.

ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி?

ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.

ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே!

உங்கள் கண்களை,உங்கள் காதுகளை,உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...!
கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்என்று நபிகள் (ஸல்) அவர்கள் பட்டியல் போட்டார்கள்.

இறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்:
உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home