15 November 2013

பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பகீர் தாக்குதல்கள்

“கோத்ரா முதல் பாட்னா வரை நடந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் தான் காரணம்” என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா குற்றம் சாட்டியிருப்பது ஆர்.எஸ்.எஸ், பாஜக வட்டாரத்தினைக் கதிகலங்க வைத்திருக்கிறது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் – பாஜகவிற்கு எதிராக கடும் குற்றசாட்டுகளை முன் வைத்த வகேலா முசாபஃர் நகர் வண்முறையிலும் புத்தகயா குண்டு வெடிப்புகளிலும், ஆர்.எஸ்.எஸ்-பாஜக அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்:
“கோத்ரா முதல் பாட்னா வரையுள்ள குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஒன்றே ஒன்று தான். அரசியல் ஆதாயம். இந்துக்களையும் முஸ்லீம்களையும் கொல்வது என்பதே அது. அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரிக்க சதி திட்டம் தீட்டுவது பாஜகவின் அரசியல் தந்திரமாகும்.
குண்டுவெடிப்புகளிலும், கலவரஙகளிலும் கொல்லப்படும் இந்துக்களைக் குறித்தோ முஸ்லீம்களைக் குறித்தோ ஒரு வருத்தமும் அவர்களுக்கு இல்லை. அதிகாரத்தை அடைய இந்த மரணங்கள் அவசியம் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
பாட்னா பிஜேபி பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் இந்துக்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புகளுக்குப் பண உதவி அளிப்பது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புமே ஆகும். காதியானிகளுக்குப் பண உதவிகளை செய்து அவர்களைப் பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுத்துகிறது.
காதியானிக்கள் தஙகளையும் முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள். ஆனால் இவர்களை முஸ்லீம்களாக, முன்னிலை முஸ்லீம்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை.
பாட்னா குண்டு வெடிப்புகளுக்கும் குஜராத்திற்கும் தொடர்பு உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது. காரணம், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கடிகாரம் குஜராத்தில் மோர்பியில் தயாரிக்கப்பட்டது. மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் குஜராத்தில் ஹலோலில் தயாரிக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் எல்லாம் சுட்டிகாட்டுவது குண்டு வெடிப்புகளுக்குச் சதி திட்டம் தீட்டியது குஜராத்திலிருந்து தான் என்பது புலனாகும்.
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அஹமதாபாத் மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் எல்.ஜி மருத்துவமனையிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்களும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவினர்கள் தான் என்பதும் எனது சந்தேகமாகும். அந்தக் குண்டுவெடிப்புகளில் பலர் கொல்லப்பட்டார்கள்” என்றும்
வகேலா தெரிவித்தார்.
இந்தக் குற்றசாட்டுகளுக்கு என்ன ஆதாரம் என்று ஊடகவிலயாளர்கள் கேள்வியை எழுப்பிய போது…அதற்கு பதிலளித்த வகேலா,
“நான் நீண்ட காலம் ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்தவன். அவர்களை எனக்கு மிக நன்றாக தெரியும். அவர்களின் திட்டங்கள் என்ன என்பதும் எனக்கு தெரியும்” என்றார்.
உத்தர பிரதேசத்திற்குச் சென்ற மோடியின் பாதுகாப்பு பணிகளை நிர்வகிக்க சென்ற போது இறந்த குஜராத் காவல் துறையினரின் குடும்பங்களை மோடி இதுவரை சந்திக்கவே இல்லை. ஆனால் பாட்னாவில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை மோடி சந்தித்தார். அரசியல் ஆதாயத்திற்காகவும் அரசியல் விளம்பரத்திற்காகவும் மட்டுமே அவருடைய பயணத்தின் நோக்கம் இருந்தது என்றும் வகேலா குற்றம் சாட்டினார்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home