18 November 2013

பாபர் நாமா....!!



திட்டு, திட்டாக கிடந்த குட்டி குட்டி பிரதேசங்களை ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்று பெயர் சூட்டி...

800
ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான பாபர் தன்னுடைய மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதம்...

அருமை மகன் ஹுமாயூனே...

நீ இந்து மக்கள் பெரும்பான்மை வாழும் நாட்டில் மன்னராக ஆட்சி புரிகிறாய். எந்த சூழ்நிலையிலும் அவர்களின் மனம் புண்படும் படி நீ நடக்க கூடாது என்று...

சாம்ராஜ்ஜியத்தின் ராஜாவாக இருந்த ஹுமாயூனுக்கு தந்தை பாபர் கடிதம் எழுதினார்.

இக்கடிதம் இன்றும் பாபர் நாமா என்ற பெயரில் டெல்லி மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட மன்னர் தான் கோவிலை இடித்தார் என்று இட்டுக்கட்டி பாபர் மசூதியை தரைமட்டம் ஆக்கியுள்ளீர்கள்.

ராமர் பற்றி ராமாயணம்...

ராமர் பிறந்த பூமி பற்றி ராமாயணம் சொல்கிறது...

சரயூ நதிக்கரையிலிருந்து 25 மைலுக்கும் தொலைவிலுள்ள அயோத்தியில் தான் ராமர் பிறந்தார் என்று ராமாயணம் சொல்கிறது.

சரயூ நதிக்கரியிலிருந்து 25 மைலுக்கும் தொலைவில் உள்ள அயோத்தி என்பது நேபால் நாட்டில் தான் இருக்கிறது.

நேபாளத்தில் பிறந்தவருக்காக உத்தர பிரதேசத்தில் உள்ள 450 ஆண்டுகால வரலாற்று சின்னமான பாபர் மசூதியை இடித்து தரை மட்டம் ஆக்கிவிட்டீர்களே...

அடப்பாவிகளா...

உங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா ?

நீங்கள் பள்ளிவாசல் கட்டி தர தேவையில்லை, எங்களுடைய இடத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள்...

நாங்கள் ஆளுக்கு 1 ரூபாய் போட்டு 25 கோடி ரூபாய்க்கு மிக பிரம்மாண்டமான பள்ளிவாசலை கட்டி கொள்கிறோம்.

குறித்துக் கொள்ளுங்கள்... குறித்துக் கொள்ளுங்கள்....

எங்கள் மூச்சு காற்று எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக...

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் ஆராது அந்த ரணம்...!!

பாபர் மசூதியை மீட்காமல் ஓயாது எங்கள் மனம்....!!

-அஷ்ரப்

1 Comments:

At 29 June 2015 at 10:44 , Blogger பாபு பகத். க said...

AYOKKIYARKALUKKU MATHTHIYIL NALLAVARKALUM ULLANAR NANPARE!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home