சச்சின் தெண்டுல்கரின் உலக சாதனைகள் விவரம்:–
* அதிகமான போட்டியில் விளையாடியவர். *
டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்.
* சதத்தில் முதலிடத்தில் உள்ளார்.
* 12 ஆயிரம், 13 ஆயிரம், 14 ஆயிரம், 15 ஆயிரம் ரன்னை கடந்த முதல் வீரர்.
* வெளிநாட்டில் அதிக ரன் (8145) மற்றும் அதிக சதம் (29) எடுத்துள்ளார்.
* ஆயிரம் ரன்னுக்கு மேல் 6 முறை (1997, 1999, 2001, 2002, 2008, 2010).
* 150 ரன்னை 20 முறை எடுத்து சாதனை புரிந்தார்.
* 20 வயதுக்கு முன்பு 5 சதம் எடுத்தார்.
* இந்திய கேப்டன் பதவியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர்.
1999–ல் நியூசிலாந்துக்கு எதிராக 217 ரன் எடுத்தார். இதற்கு முன்பு கவாஸ்கர் 1978–ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 205 ரன் எடுத்ததுதான் முன்பு சாதனையாக இருந்தது.
* அதிக அரைசதம் அடித்தவர்.
* ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை (18,426) எடுத்துள்ளார்.
* 49 செஞ்சூரி அடித்து முதலிடத்தில் உள்ளார்.
* இரட்டைசதம் அடித்த முதல்வீரர்.
*அதிக அரைசதம் (96) எடுத்தார்.
* 150 ரன்னுக்கு மேல் 5 முறை எடுத்த ஒரே வீரர் ஆவார்.
* ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்த வீரர். 1998–ல் 1894 ரன் குவித்தார்.
* ஒரு ஆட்டத்தில் அதிக பவுண்டரி (25) அடித்தவர். ஒட்டுமொத்தமாக அதிக பவுண்டரி (2016) அடித்து இருந்தார்.
* அதிக போட்டியில் ஆடியவர் (463).
* தொடர்ந்து 185 ஆட்டங்களில் (ஏப்ரல் 1990–ஏப்ரல் 1998) விளையாடியவர்.
* 90 மைதானங்களில் ஆடியுள்ளார்.
* 14 ஆயிரம் – 18 ஆயிரம் ரன்னை தொட்ட உலகின் ஒரே வீரர் ஆவார்.
* 7 முறை (1994, 1996, 1997, 1998, 2000, 2003, 2007) ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.
* ஒரே ஆண்டில் அதிக சதம் எடுத்தவர். 1998–ல் 9 செஞ்சுரி அடித்தார்.
* 10 ஆயிரம் ரன்னை வேகமாக கடந்த வீரர் ஆவார்.
* தொடக்க வீரரில் அதிக ரன் (15,310) எடுத்தவர். 45 சதம், 75 அரைசதம் அடங்கும்.
* அனைத்து சர்வதேச போட்டிகளையும் சேர்த்து (டெஸ்ட், ஒருநாள் போட்டி) 100 சதம் அடித்த உலகின் ஒரே வீரர் ஆவார்.
* 33 ஆயிரம் ரன்னை கடந்த முதல் பேட்ஸ்மேன் ஆவார். - நன்றி மாலைமலர்..
இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்பில்லை!
உண்மையில் விளையட்டு துறைக்கு என்று ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமானால்! அதற்கு இவரை தான் முதல் ஆளாக பரிசீலிக்க வேண்டும்!
*1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் 'நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள்! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார்!' என்று சொல்லி இருக்கிறார்!
*சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும்! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே!' என எழுதின!
*ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!
*1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது!
*ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகிறார்! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை!
*ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள்!
*ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
*தியான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன், ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார்! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார்!
*சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார்.
இவர் பெயர் "தியான் சந்த்".
பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கபட்டது. விளையாட்டு அமைச்சகமும் இவருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு "பாரத் ரத்னா" கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு மறுத்துவிட்டது.
பாரத ரத்னா விருது நமது நாட்டில் விளையாட்டு துறைக்கு முதல் முதலாக இப்போது அறிமுக படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது ஆனால் நமது நாட்டில் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான் என்றாகி பல காலமாகிவிட்டது அதைபற்றி தனி பதிவாக அலசி காயப்போடுவோம் இப்ப சச்சினுக்கு ஏன் கொடுத்தார்கள்? நியாமாக அது கபில் தேவுக்குதான் கொடுத்திருக்க வேண்டும். இந்தியா அணி 1983ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்ற நிலையில் ஜிம்பாப்வே உடனான போட்டியில் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்குடன் வெளியெற ஆறாவது வீரராக களம் இறங்கி ஒரு சூராவளியாக ருத்தரதாண்டவம் ஆடி (175ரன்கள்138பந்து 16சிக்சர் 6 ஃபோர்) அடித்து இறுதி போட்டியில் வெல்லவே முடியாது என்று இருந்த மே.இந்திய அணியை வீழ்த்தி இந்திய அணியை உலக சாம்பியன் ஆக்கிய மாபெரும் வீரனக்கு கொடுத்திருக்க வேண்டும். சச்சின் மிக சிறந்த வீரர் அவரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆனால் இப்படி அவசர அவசரமாக இந்த விருது கொடுக்க மிக முக்கிய காரணம் வரும் நாடாளமன்ற தேர்தலில் அவர் ஆளும் காங்கிரஸ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறார் அதற்கான அன்பளிப்புதான் இந்த விருதே தவிர அவர் திறமைக்கானது அல்ல அவரது கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருத்தியாக இருந்த போதும் இந்த விருது கொடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைய முடியவில்லை என்பதே உண்மை.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home