வந்தே மாதரம் - சரஸ்வதி வந்தனம்
வந்தே மாதரம் - சரஸ்வதி வந்தனம் -
ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வந்தே மாதரம் - சரஸ்வதி வந்தனம் இந்த இரண்டு பாடல்களும் மத உணர்வுகளை பாதிக்கும் பாடல்கள் ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது...
வந்தே மாதரம் என்ற வங்க மொழிப்பாடலின் தமிழாக்கம் இதோ...
தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே,
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்.
பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் 1876-ல் வங்காள மொழியில் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலையே தேசிய கீதமாக அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டது ஏன் என்பது இப்போது புரிந்திருக்கும்
பங்கிம் சந்திர சட்டர்ஜியின் 'ஆனந்த் மத் ' என்ற நாவலில் இடம்பெற்ற இப்பாடல் ரவீந்தரநாத் தாகூரால் இசையமைக்கப்பட்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அப்பாடலின் முக்கியத்துவத்தையும் தனித்தன்மையையும் தாகூர் போற்றிய போதிலும், நாவலின் பின்னனி இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் உள்ளது என்று ஒப்புக்கொண்டார். முழுப்பாடலின் பாடலின் கருத்து மத ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாக இருந்ததால்தான் நேரு, தாகூர் போன்றவர்கள் ஐந்து பத்திகள் கொண்ட முழுப்பாடலில் பாடஅருகதை இல்லாத மூன்று பத்திகளை வெட்டி எறிந்தனர்.
இந்திய ஒரு மத சார்பற்ற நாடு எனவே அனைத்து தரப்பு மக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடுவதில் யாருக்கும் எவ்வித பிரச்சினையுமில்லை ...
ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா - என்கிற பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு ...
பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா
இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள்
இதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சை போன்றதாகும்
வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே
அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே
எங்கள் பாரதம் தான் எங்கள் அரவனைப்பும் பாதுகாப்பும்
எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை
இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள்! எங்கள் நாடே இந்தியா
தொகுப்பு : தக்கலை கவுஸ் முஹம்மத்
Source : இணைய தளங்கள்

இந்திய முஸ்லிம்களை கோழைகளாகவும் கீழ்தரமாகவும் சித்தரித்த கதை பின்னனியில் இடம்பெற்றதுதான் வந்தே மாதரம் பாடல்.
இப்பாடலை அந்நாவலின் பின்னனியில் வைத்து இந்திய இஸ்லாமியர்கள் பார்க்கக்கூடாது என்று சிலர்
கூறினாலும். 'ஆனந்த் மத் ' நாவலின் முக்கிய அங்கமான 'முஸ்லிம் படுகொலைகள் ' தற்பொழுது RSS/VHP/BJP யினரால்
அரங்கேற்றப்படுவதால்தான் இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாட மறுக்கிறார்கள். - பிறைநதி புத்திரன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home