லேப்டாப்பின் battery வாழ்நாளை கூட்ட..!
2௦௦௦ ஆம் ஆண்டளவில் டெஸ்க்டாப் PC தான் எல்லோர் வீட்டிலும் பெரிதாகக்
காணப்பட்டது. ஆனால், இப்போதோ வீட்டில் நிச்சயம் ஒரு லேப்டாப் இருக்கும் என நான்
நம்புகிறேன். அந்த வகையில் நாம் லேப்டாப் ஐ battery மூலம் 2 அல்லது 3 மணித்தியாலங்கள் பாவிப்போம்.
ஆனால் charge செய்வதற்குப் பெரிதாக நேரம் கொடுக்க
மாட்டோம்… அந்த வகையில் இன்றைய பதிவில் நான் சில கருத்துகளை உங்களுடன்
பகிரலாமென இருக்கிறேன்.. அதுதான் battery வாழ்கையை கொஞ்ச நேரம் அதிகரிக்க
சிக்கனமாகப் பாவிக்கும் முறை பற்றி..
1. ஸ்க்ரீனின் brightness ஐ குறைத்தல்…
உங்கள் லேப்டாப்பில் முக்கிய பங்கை
வகிப்பது ஸ்க்ரீனின் brightness தான். அதிகமாக brightness
ஐ கூட்டி வைத்திருந்தால் battery charge குறைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
brightness ஐ குறைக்க…
Control Panel >
Hardware and Sound > Power Option ல் சென்றால் கீழுள்ள படத்திலுள்ள வாறு செய்யுங்கள்..
படங்கள், பாடல்கள் கேட்க்கும் போது குறைந்தளவு headphone களைப் பாவித்தால்
பெரிய sound மூலம் வீணாகும் battery
charge ஐ கொஞ்சம் குறைக்கலாம். பெரிதாக charge குறைக்க முடியாது
என்றாலும் உங்கள் கேள் திறனைக் கூட்டும்…
3.Bluetooth , WIFI என்பவற்றை off செய்யுங்கள்…
Software கள் தான் அதிகமாக battery
charge ஐ குறைப்பதில் முக்கிய பங்கு
வகிக்கிறது. அந்த வகையில் தற்போது வருகின்ற அனைத்து லேப்டாப் களுமே செய்த உடனேய Wifi சிக்னல்களை தேட
ஆரம்பித்துவிடும்.
அப்படித் தேடும் போது battery charge வீணாகும் தானே….!!
எனவே, அதனைக் குறைப்பதற்கு தேவையற்ற அல்லது
தற்போது பயன்பாடாத apps களை நிறுத்துதல் நல்ல வழியாகும்.
4.USB அல்லது CD களை தேவையற்ற நேரம் அப்பால் வையுங்கள்..
நீங்கள் USB device களை தேவையற்ற
நேரங்களில் கழட்டி வைத்தல் உங்கள் battery charge இழப்பதை குறைக்கலாம்.
ஏன் என்றால் அவையும் உங்கள் கணனியின் charge ஐ பெற்றுத் தான் இயங்குகின்றன.
எனவே, நீங்கள் பாவிக்கும் போது பாவித்து
விட்டு தேவையற்ற நேரம் கழட்டி வைத்தல் சிறந்தது. சில வேளைகளில் நீங்கள் பயணம்
செய்யும் போது இவை கணனியில் இருந்தால் துள்ளல் ஏதாவது நடந்தால் உங்கள் கணனியில்
இருக்கும் சிஸ்டத்தில் பிரச்சினை ஏற்படும்.
5. Charge செய்த பின் வயரை கழட்டி வையுங்கள் மறுபடியும் battery charge 80% ஆன பின் மறுபடியும் சார்ஜ் போட்டுப் பாவியுங்கள்…
6. Start-up ப்ரோக்ராம் களை குறைத்தல் மூலமும் உங்கள் கணனியின் battery life ஐ கூட்ட முடியும்.. அதற்கு
RUN
> msconfig என type செய்யுங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு செட் செய்து கொள்ளுங்கள்.
7. நீங்கள் உங்கள் battery
வாங்கி 2 வருடங்கள் ஆன பின் புது battery ஐ பாவிப்பது சிறந்தது
என கணணி ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
சரி, இவளவு தான் நீங்கள் இதனை உங்கள்
லேப்டாப்பில் செய்து பாருங்கள்… உதவியானதாக இருக்கும் என நம்புகிறேன்..
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home