30 November 2013

சங்கர ராமன் கொலை வழக்கை, ...




ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது துவக்கி வைத்த சங்கர ராமன் கொலை வழக்கை, அதற்குப் பிறகு முதல்வரான கருணாநிதி நினைத்திருந்தால் அப்போதே முடிந்து வைத்திருக்கலாம். நீதி வென்றிருக்கும்.

மாறாக, கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசு ஆட்சியலிருக்கும் போதுதான், சங்கர ராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞம், சாட்சிகளும் ஜெயேந்திரனுக்குஅப்ருவராகமாறினார்கள்.

ஜெமினி சர்க்கஸ், ஜம்போ சர்க்கஸ்களுக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு அரசு தரப்பு சாட்சிகள் பல்டிஅடித்தார்கள்.
அதன் காரணத்தினாலேயே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்கொலை குற்றத்திலிருந்து இன்று விடுதலை ஆகியிருக்கிறார்.

இப்படி ஒரு தீர்ப்பு வருவதற்கு திமுகவின் சூத்திரஆட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம்.

இப்போதும் கருணாநிதி ஒரு எதிர்கட்சியாககூட தமிழக அரசுக்கு எதிராக, ‘இந்த வழக்கில் ஜெயலலிதா அரசு மந்தமாக நடந்துகொண்டது. இந்த வழக்கை தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்என்று சொல்ல மறுக்கிறாரே அதற்குப் பின் இருக்கிறது, அவர் ஆட்சி காலத்தில் அவர் எப்படி இந்த வழக்கில நடந்து கொண்டார் என்பதற்கு சாட்சி.

கருணாநிதி இலங்கை பிரச்சினையில் துரோகம் செய்து விட்டார்என்று இன்றும் பேசுகிற தமிழ்த் தேசியவாதிகள், கருணாநிதியின் இந்த ஜெயேந்திர ஆதரவை பற்றி இப்போதுகூட வாய் திறக்கவில்லை.

தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தால், ‘பெரியார் பிறந்த மண்ணில் நடக்கிறது.’ ‘இது தான் திராவிட இயக்கங்களின் யோக்கியதையா?’ என்று தலித் விரோத்தை தந்திரமாகபெரியாரோடு கோர்த்து கடுமையாக விமர்சிக்கிற, பார்ப்பன அறிவாளிகள், பார்ப்பன மார்க்சிஸ்ட்டுகள்;

பெரியார் பிறந்த மண்ணில் சங்கராச்சாரியருக்கு ஆதரவாக நடந்து கொண்டது திமுக. மற்றும் திராவிட இயக்க அரசுகள். இதுதான் திராவிட இயக்கதின் யோக்கியதையா?’ என்று கண்டிக்காமல் இருக்கிறார்களே ஏன்?ஏனென்றால் கேட்பதில் பார்ப்பன எதிர்ப்பு இருக்கிறது.

ஒரு பார்ப்பனரின் கள்ள மவுனத்திற்குப் பின் பார்ப்பன சிந்தனையும் பார்ப்பனரல்லாத தலைவர், அறிவிஜீவிகளின் அமைதிக்கு பின் பார்ப்பன ஆதரவும் அந்த மவுனத்திற்குப் பரிசாக கிடைக்கிற லாபமும் ஒளிந்திருக்கிறது.

- வே மதிமாறன்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home