21 November 2013

அமெரிக்காவில் அசுர வளர்ச்சியை நோக்கி இஸ்லாம்.....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!

அமெரிக்காவில் அசுர வளர்ச்சியை நோக்கி இஸ்லாம்.....!!

இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்கா தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

எங்கு இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளும், பொய்ப்பிரச்சாரங்களும் அளவுக்கதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீ போல் பரவும் என்பது தான் வரலாறு, அந்த வரலாற்றிற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.

2002 செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்களின் விளைவாக ஒரு மாபெரும் சிந்தனைப்புரட்சி அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டது,

அதற்குப்பிறகு தான் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு தான் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத்தீர்ந்தன.

இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆண்டுக்கு 20,000 பேர் இஸ்லாத்தை தழுவி வருகின்றனர்.

அதே போல் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் 1200 பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.

அப்படியென்றால் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல் என்ற கணக்கு வருகிறது, அதை வாரத்திற்கு கணக்கிட்டு பார்த்தால் ஒரு வாரத்திற்கு 2 பள்ளிவாசல் வீதம் அமெரிக்காவில் கட்டிவருகிறார்கள்...

அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சி அமெரிக்காவில் எந்த அளவிற்கு உச்சத்தை எட்டியது என்றால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாற்றப்பட்ட பல நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு சான்று பகர்கின்றது.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்திலுள்ள அஸ்டோரியா என்ற இடத்திலுள்ள ஒரு தேவாலயம் பூட்டப்பட்டு அது தற்போது பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தால் வெளிப்புறத்தில் அது தேவாலயம் போன்று காட்சி தரும். ஆனால், அது தற்போது அதே தோற்றத்தில் அல்லாஹ்வை வணங்கும் அவனது இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இது போல நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டுள்ளன என்ற தகவலை இந்தப் பள்ளிவாசலுடைய புகைப்படத்தை நமக்கு அனுப்பி விட்டு தகவல் தெரிவித்துள்ளார் நமது அமெரிக்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள்.

மேலும், கூத்து கும்மாளங்களில் ஈடுபடுவதற்கு உதவும் பல பார்களும், கேளிக்கை விடுதிகளும் மூடப்பட்டு பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல்.

அமெரிக்காவில் இஸ்லாத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால் அங்குள்ள வாஷ் வேகாஸ் என்ற பகுதியை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள், அந்த அளவிற்கு அங்கு ஷைத்தானிய செயல்களுக்குப் பஞ்சமிருக்காது, அந்த நகரத்திலும் கூட இஸ்லாம் வேரூன்றியதன் விளைவாக அங்கும் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்று உற்சாகமாகத் தெரிவித்தார் தவ்ஹீத் ஜமாஅத்தின் அமெரிக்கப் பொறுப்பாளர்,

மேலும் பள்ளிவாசல்களில் தொழுகையின் போது மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதால் சாலைகளிலும் முஸ்லிம்கள் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாகக் காணலாம் என்றும் அந்த புகைப்படங்களையும் அனுப்பித்தந்துள்ளார்,

சில தேவாலயங்களை முஸ்லிம்களே முழு நேர வாடகைக்கு வாங்கி பள்ளிகளாக அவற்றை பயன்படுத்தி வருகின்றனர், இங்கிலாந்தின் மின் செஸ்டர் ஜும்மா பள்ளியும் ஏற்கனவே தேவாலயமாக இயங்கிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து உருவாக்கப்பட்டதே என்பது குறிப்பிடத்தக்கது,

தொழுவதற்கு இடம் தரும் தேவாலயங்கள் :

கிறிஸ்தவ தேவாலயங்களில் தான் கூட்டமில்லை, ஆனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களோ நிரம்பி வழிகின்றன, இப்படி நிரம்பி வழியக்கூடிய பள்ளிவாசல்களின் அருகிலேயே தேவாலயங்களும் உள்ளன, முஸ்லிம்களின் கூட்டம் பள்ளிவாசல்களில் அலை மோதுவதைப் பார்த்துவிட்டு சில தேவாலய நிர்வாகமே முன்வந்து தங்களது தேவாலயத்தின் வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்ற அனுமதியளித்துள்ளார்கள் என்ற ஆச்சர்யமான செய்தியையும் நமது சகோதரர் தெரிவித்தார், ஒரு தேவாலய வளாகத்தில் முஸ்லிம்கள் தொழும் புகைப்படத்தையும் அவர் நமக்கு அமெரிக்காவிலிருந்து அனுப்பித் தந்துள்ளார்,

இந்த அளவிற்கு அமெரிக்காவில் இஸ்லாம் மகத்தான எழுச்சியை பெற்று வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ்...

கருப்பின மக்களை அதிகம் கவரும் இஸ்லாம் :

ஜாதி, மொழி, நிறம் என்று பாகுபாடு காட்டும் மதங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு பலர் இந்த தூய கொள்கையின் பால் வந்த வண்ணம் இருக்கிறார்கள்,

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கருப்பினத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், ஏற்றத் தாழ்வு காட்டப்படுவதின் மூலம் மனதுடைந்து , வாழ்கையையே வெறுக்கும் அளவுக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு உண்மையான தெளிவை இஸ்லாம் கொடுத்து மனிதனை மனிதனாக வாழ வைப்பதே இதற்கான காரணமாகும்.

அல்ஹம்துலில்லாஹ்....
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home