27 November 2013

பெண்களின் வலியை போக்கும் நிவாரணம் !!



பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசாரியாக பாதிகாலம் வலியால் அவதியுறுகிறார்கள். குழந்தை பேறு என்ற தனித்தண்மை இருப்பதால் இயற்கை நியதியாக பெண்களுக்கு வலி தாங்கும் சக்தி சற்று கூடுதலாக அமைந்துள்ளது. இருப்பினும் உச்சி முதல் பாதம் வரை வலி உண்டாக்ககூடிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது.
நமது நாட்டு உணவு முறைப்படி சமைப்பதற்கு பலமணி நேரம் சமயலறையில் இருக்க நேரிடுகிறது. மேலைநாடுகளிலே எளிய முறையில் சூடுபடுத்துவதற்கு மட்டுமே சமயலறையை உபயோகிக்கின்றனர். நாம் பண்டைய முறைப்படி கீழே அமர்ந்து சமைப்பதை விட்டுவிட்டு மேலை நாடுகளைபோல் நின்று கொண்டே சமைக்க சமையலறையை வடிவமைத்து பல மணிநேரம் நின்று சமைப்பதால் பெண்கள் பல வலியால் அவதிப்படுகின்றனர். மேலும் இன்றைய சமுதாய சூழ்நிலையில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக 8 மணிநேரம் வேலைக்கு செல்ல நேரிடுகிறது. அலுவலக வேலை பளு ,வீட்டு வேலை பளு மற்றும் பயணத்தால் ஏற்படும் பளு ஆகியவை சேர்ந்து மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் தலைவலி போன்ற இதர வலிகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
தலைவலி……..
தலைவலியில் பலவகை உண்டு இதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மைக்ரேன் தலைவலி என்பது. ஒரு புறமாக நாடி துடிப்பது போலவும் வேலை செய்தால் அதிகமாவதும் குமட்டல் மற்றும் வாந்தியுடன் ஒலி மற்றும் ஒளி ஒவ்வாமையுடன் காணப்படும். இதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய சிகிச்சை ஆகும் ம்சரியான தூக்கம், உடற்பயிற்சி, உணவுமுறை, மன அழுத்தம் நீங்கும் பயிற்சி ஆகியவை முறையே கற்றுக்கொள்ள வேண்டும்.
கழுத்து, தலை மற்றும் தோள் பட்டையின் சம நிலை சரி செய்தல்.
உணவுப் பொருள் மற்றும் மற்ற மாத்திரைகள் தலைவலியை ஊக்குவிப்பதாக இருந்தால் அதை தவிர்ப்பது.
தலை முதல் கால் வரை வலி…….
நீண்ட நாட்களுக்கு தலை முதல் கால்வரை வேறுபட்ட இடங்களில் வலி, நாளுக்கு நாள் புதிய பாகங்களில் புதிய வலி ஏற்படுவது, சோர்வு, தலை வலி, ஞாபகமறதி, தூக்கமின்மை, புத்துணர்ச்சி இல்லாமல் காலையில் எழுவது, இவையெல்லாம் பைப்ரோ மையால்ஜியாவின் அறிகுறி. ஆண்கள், பெண்கள், மிக குறைந்த அளவிற்கு சிறுவர்கள் என்று எல்லோரையும் இந்த தசை வலி தூக்கமின்மை தாக்கினாலும் இதில் பொதுவாக அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். பைப்ரோமியால் ஜியா தாக்கியவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களே என்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவம் உடல் பயிற்சி, மன அமைதி காத்தல் ஆகியவை முக்கியமாகும். இந்த நோயை பற்றி முழுமையாக அறிதலும் மருத்துவ ஆலோசனை பெறுதலும் மிக மிக முக்கியமானது. இந்த நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இரவு நேரத்தில் அதாவது அடுத்தடுத்து இரவு சாப்பாடும் தூக்கமும் தான் என்ற நிலையில் காபி அல்லது மது அருந்துவதை காட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது. இதுவரை இந்த நோய்க்கான காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும், இந்த நோய் உள்ளவர்களுக்கு செரடோலின் என்ற வேதிப்பொருளின் அளவு மூளையில் குறைந்திருப்பதும், சப்ஸ்டேன்ஸ்-பி என்ற வலி உண்டாக்கக்கூடிய வேதிபொருள் தண்டுவடத்தில் அதிகமிருப்பதையும், இவர்களின் மூளை வலி உணர்ச்சிக்கு அதிகமாக தூண்டப்படுவதையும், உடல் பருமன் அதிக இருப்பவர்களும் ஆர்த்ரைட்டிஸ், நோய் கொண்டவர்களுக்கும் அதிகம் வருவதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.
எலும்பு அடர்த்தி தேய்மானம்………
மாதவிடாய் நின்று போன பிறகு பெண்களுக்கு எலும்பு அடர்த்தி தேய்மானம் தொடங்கிவிடும். சாதாரணமாக ஏற்படும் இந்த தேய்மானத்தை துரிதப்படுத்தும் நோய் தான் ஆஸ்டியோ பொரோசிஸ்என்று வழங்கப்படுகிறது. சாதாரணமாக உடம்பின் எழும்புகளில் உருவாக்கமும், அழிவும் நடந்து கொண்டே இருக்கும். இதில் சமமின்றி போகும்போத, ஆஸ்டியோ பொரோசிஸ் ஏற்படுகிறது.
ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியம் அதிகம். ஆனால் இந்த இடர்பாடை குறைக்க பல வழிகள் உண்டு குறிப்பாக முதுகெலும்பில் ஏற்படும் முறிவினால் உண்டாகும் வலிகளை குறைக்க சில வழி முறைகள் உண்டும்.
குதிங்கால் வலி……..
பிளான்டார் பேஷியைடிஸ் எனப்படும் குதிங்கால் வலி, தூங்கி யெழுந்தால் வலி உண்டாவதும் நடக்க நடக்க வலி குறைவதுமான விசித்திர பிரச்சினையாகும். பிளான்டார் பேஷியா என்று பாதத்தில் ஒரு தோல் போன்ற அமைப்புள்ளது. இது தட்டை பாதம் உள்ளவர்களுக்கும் அதிக எடை உள்ளவர்களுக்கும், பாத வளைவு அதிகப்படியாக இருப்பவர்களுக்கும் அதிக இறுக்கம் ஏற்பட்டு, குதிங்கால் வலி ஏற்படுத்துகிறது.
சிலருக்கு குதிங்காலில் எலும்பு குருத்து வளர்ந்து வலி ஏற்படுகிறது. இது ஒரு சாதாரண பிரச்சினையே 95 சதவீதத்தினருக்கு சாதாரண பயிற்சியே இதை சரி செய்ய போதுமானது. பயிற்சி: மிதமான வெண்ணீரில் கால் மணி நேரம் தினமும் பாதத்தை வைக்கவும். பிறகு பாதத்தில் முன் பகுதியை 10-15 செ.மீ. உயரமான பொருளில் வைத்து ஸ்ட்ரெட்ச் செய்வது போல் அழுத்தவும். இந்த பயிற்சி பலனளிக்காமல் போனால் அதற்கு இன்ஜெக்ஷல் செய்து சரிசெய்யலாம்.
முதுகுவலி…….
முதுகுவலியானது முதுகெலும் பின் தொடர்ச்சியிலோ, எலும்பு களை சுற்றியுள்ள தசைகள் மற்றும் ஜவ்வுகளிலோ அல்லது முதுகெலும்புகளை பின்னிப் பிணைத்திருக்கும் தண்டு வட நரம்புகளிளோதான் உற்பத்தியாகின்றன. முதுகெலும்பை அனைத்திருக்கும் தசைகள் மற்றும் ஜவ்வுகளின் ரணத்தால் ஏற்படும் முதுகு வலியானது. சாதாரணமாக 3 மாதங்களுக்கு உட்பட்ட அக்யூட் பெயினாகத் தான் இருக்கும்.
இதனால் நடு முதுகில் வலியும், முதுகின் இரு புறமுள்ள தசைகளின் இறுக்கத்தால் முதுகு அசைவின் போது வேதனையும் ஏற்பட்டு முதுகை முழுவதும் சைய விடாமல் தடுக்கும். இதற்கு சாதாரண வலி நிவாரண மற்றும் தசை இறுக்கத்தை குறைக்கும் மாத்திரைகள், உடற்பயிற்சி மற்றும் இதர பிஸியோதெரபியும் போதுமானது. இதே போன்று மையோ பேசியல் பெயின் சின்ரோம் என்று ஒரு நோய் இருக்கிறது.
இது அதிக வேலை செய்வதால் சரியான நிலையை நிற்கும் போதும் படுக்கும் போதும், உட்காரும் போதும், கடைபிடிக்காமல் இருப்பதால் மற்றும் மன அழுத்தத்தாலும் ஏற்படுகிறது. இதை எந்த பரி சோதனையாலும் கண்டு பிடிக்க முடியாது. முதுகில் சில இடங்களில் தொடும் போதே அதீத வலியும் மற்றும் தசையில் வலியுடன் கூடிய இறுக்கம் காணப்படும். இதற்கு மேற் கூறிய சாதாரண சிகிச்சைகளுடன் ட்ரிகர் பாயின்ட் இன்செக்ஷன் எனப்படும் சிகிச்சைகள் நிரந்தர தீர்வு தரும்.
நடுப்புறத்தட்டினால் ஏற்படும் பிரச்சினைகள்:
அதிக பளு தூக்குவதாலோ அதிகமான இருமல் தும்மலினாலோ வளைந்து நிமிர்ந்து அதிக வேலை செய்வதாலோ, ஷாக் அப்சர்பர் சரியில்லாத இரு சக்கர வாகனங்கள் ஒட்டு வதாலோ டிஸ்க் என்னும் நடுப் புபுறத்தட்டு, ரணம் ஏற்பட்டு, பிதுங்குவதால் ஜெல்லி போன்ற திரவம் வெளியே கசிந்து பாஸ்போலைபேஸ் ஏ2 என்ற சுரப்பியை சுரக்க வைக்கிறது.
இந்த சுரப்பியினால் தான் வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சினை அதிகமாக இருபது வயது முதல் நாற்பது வயதினரை தாக்குகிறது. அதிலும் எல்.4 எல்.5 மற்றும் எல்.5 எஸ்1 என்ற டிஸ்குகளை தாக்குவதால் பின் தொடை, கென்டைகால், பாதம் மற்றும் முதுகிலும் வலி ஏற்படுத்துகிறது. இதை டிஸ்க் புளோலாபஸ் வித் சையாடிகா என்கிறோம். இதனால் முதுகுவலியுடன் கை கால்களில் பரவும் வலி, மரத்துப் போதல், வலு விழுத்தல, போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இருமும் போதும், தும்மும் போதும் உட்காரும் போதும் வலியை அதிகப்படுத்தும்.
படுத்த வாக்கில் முட்டிகளை மடக்காமல் காலை தூக்கும் போது, வலி அதிகமாகும். இதற்கு தற்காலிக ஒய்வு, வலி மாத்திரைகள், உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி போன்றவைகள் 6 மாதங்களுக்கு உட்பட் பிரச்சினைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதுவே க்ரானிக் பெயின் வகையை சேரும் போது, அதாவது நாள்பட்டு இருக்கும் போது, அறுவை சிகிச்சை இல்லாத ஊடுறுவும் சிகிச்சைகளாக எபிடூரல் இன்ஜெக்ஷன் டிஸ்கோலைஸிஸ் போன்ற அதிநவீன வலி நிவாரண சிகிச்சைகள் எந்த வித பக்க விளைவுகளும் இலலாமல் தீர்த்து விடும்.
அதிகப்படியான டிஸ்கு பிதுங்கி தண்டு வடத்தை அழுத்துவதை கம்ப்ரசிவ் மயிலோபதி என்கிறோம். அதுவே தண்டு வட முடிவில் இருக்கும் நரம்பு தண்டு வடத்தை அழுத்தும் போது அதை காடா இக்குனா சின்ரோம் என்கிறோம். இதனால் நடக்க முடியாமல் போவதும்,சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்சுனை எற்படலாம். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சையே வழியாகும்.
நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்……… தவிர்க்கவேண்டியவை:-
காபி, மது, புரோட்டீன் அதிகமுள்ள உணவு (அதாவது மாமிச இறைச்சியை குறைவாக சாப்பிடுதல்) கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகள் நன்றாக பதனப்படுத்தப்பட்ட மாவுச்சத்து உணவுகள் (வெள்ளை ரொட்டி பொருட்கள்) பால்சத்து பொருட்கள் இவைகளை தவிர்க்க வேண்டும்.
உண்ண வேண்டியவை:-
பச்சை காய்கறிகள் (பசலைக்கீரை சாப்பிடலாம்) தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலில் இல்லாத எந்த ஒரு உணவையும் உட் கொள்ளலாம். குறிப்பாக ஆஸ் டியோ பொரோசிஸ் உள்ள வர்களுக்கு வைட்டமின் கே பற்றாக் குறை இருக்கும். ஆகவே கே வைட்டமின் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம். உடற்பயிற்சி:- உடல் எடை அதிகரிக் காமல் இருப்பது அவசியம். இதனால் வாரம் 3 முறை 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம் உடல் எடை அதிகரிப்பை தடுக்க நடை, நாட்டியம், டென்னிஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகள் சிறிய எடைப் பொருட்கள் தூக்குவது படி ஏறி இறக்குவது தோட்ட வேலை என்று நிறைய மிதமான வேலைகளைச் செய்யலாம். உட்கார்ந்து கொண்டே இருப் பவர்களுக்கு சிறுநீர் மற்றும் மலம் மூலம் அதிக கால்சியம் வெளியேறுகிறது இதைத் தவிர்ப்பது நல்லது .

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home