30 November 2013

திருப்பதி நகரில் உள்ள இஸ்லாமிய கல்லூரியை இடிக்க பாஜகவின் தூண்டுதலால், மாவட்ட கலெக்டர் எதேச்சதிகார உத்தரவு !



திருப்பதி புறநகர் 'தொண்டவடா'வில் கட்டப்பட்டு வரும் 6 அடுக்கு இஸ்லாமிய கல்லூரியை இடிக்க, பாஜகவின் தூண்டுதலால், மாவட்ட கலெக்டர் 'ராமகோபால்' எதேச்சதிகாரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு பாஜக தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் :

ஹிந்து அடையாளமும் ஹிந்துத் தன்மையும் கொண்ட ஆன்மீக தலம் திருப்பதி.

ஹிந்துக்களின் புனிதத் தலம் அமைந்துள்ள மாவட்டத்தில் 'இஸ்லாமியக் கல்லூரி' கூடாது.

இங்கு உள்ள முஸ்லிம்கள், திருமலை வெங்கடேசப் பெருமாளை மிகவும் போற்றுபவர்கள்.

இஸ்லாமிய கல்லூரி தொடங்கப்பட்டால், வெளியூர்களிலிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் மற்ற ஆர்வலர்களும் நாளடைவில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அவர்கள், உள்ளூர் மக்களின் மனத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்களை விதைத்துவிட்டால், இங்கே தற்போது நிலவி வரும் அமைதி கெட்டுப்போகும்.

உண்மை நிலையும் - கலெக்டரின் உத்தரவும் :

திருப்பதியின் புறநகரில் உள்ள 'தொண்டவடா' என்ற கிராமத்தில், ஷேக் நவ்ஹீரா என்ற ஆலிமா, நீண்ட நாட்களாக "மதரசா நிஸ்வான் -இஷா அதுல் இஸ்லாம்" என்ற பெயரில் பெண்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.

கடந்த 2010ம் ஆண்டில் 'தரைதளம் மற்றும் முதல் மாடி' கட்டுமானப் பணிக்காக Tirupati Urban Development Authority (TUDA) முறையான அனுமதி பெற்று கட்டிடப் பணிகள் துவக்கப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அரசு கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்றாலும் கூட, முழுமையான கட்டிட அனுமதி பெறுவதென்பது கடினமான விஷயம் தான்.

திருப்பதி நகரம் முழுவதிலுமுள்ள எல்லாக் கட்டிடங்களும் இப்படித்தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற எதார்த்தங்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல்,

அபராத கட்டணங்களை செலுத்தி கட்டிடத்தை வரன்முறைப் படுத்தும் வாய்ப்புகள் கொடுக்காமல்,

போதிய அவகாசம் அளிக்கப்படாமல்,

5 மாடிகளையும் உடனடியாக இடிக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளார், மாவட்ட கலெக்டர் ராமகோபால்.

இதனால், ஆந்திரா முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர்.

sources :

1. https://www.facebook.com/photo.php?fbid=550001421753719&set=a.300599480027249.78504.246687175418480&type=3&theater

2. http://www.dinamalar.com/news_detail.asp?id=803855
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home