தெற்கின் முதல் போராளி கட்டபொம்மன் படையில் முஸ்லிம்கள்...
தெற்கின்
முதல் போராளி கட்டபொம்மன் படையில் முஸ்லிம்கள்...
தேசத்தின்
தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரவாற்று நாயகர்களில்
ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டப்பொம்மன்.
இராமநாதபுரத்திற்கு
ஜாக்ஸன் துரையைச் சந்தித்த கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு
சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மன்
கதைப்பாடல்.
அதில்
இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை...
"மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள
தம்பி வரிசையுந்தான்
தர்ம
குணவான் இபுராமு சாகிபும்
தம்பி
இசுமாலு ராவுத்தனும்…"
- என்று பேராசிரியர் நா.வானமாமலை
பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு
கதைப்பாடல் புகழ்கிறது.*
(* செ.திவான். விடுதலைப்போரில் தமிழக
முஸ்லிம்கள். பக்கம்.36)
கட்டபொம்மன்
படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர்.
அவர்கள்
கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய
MOOKAH என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக்
கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில்
குறிப்பிட்டுள்ளார்**.
இச்செய்திகள்
தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின் விடுதலைக்காகத்
தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
(** செ.திவான். விடுதலைப்போரில் தமிழக
முஸ்லிம்கள். பக்கம்.38)
#தமிழ் தமிழன் என்று வாயளவில் மட்டும் சொல்லிக்
கொண்டு மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்தியவர்கள் அல்ல எங்கள் மூதாதையர்கள்.
தான்
வாழ்ந்த மண்ணை அடிமை தனத்திலிருந்து மீட்க வாளெடுத்து போராடியவர்களடா எங்கள்
மக்கள்.
உண்மை
வரலாற்றை புரட்டி பார் இந்த மண் சொல்லும் எங்கள் வீரத்தை...
(இந்த செய்தி...
இந்திய
வரலாற்றில் முஸ்லிம்களின் வீரத்தை, திட்டமிட்டு மறைத்த, இந்திய துணைக்கண்டத்தில் டவாலி கட்டி
ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் புறிந்த வந்தேறிகளுக்கும்
அதன் அடிமைகளுக்கும் இடியாக இருக்கும்...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home