9 November 2013

காதோரம் லோலாக்கு!



காதணிகளுக்கு என்றைக்குமே மவுசு ஜாஸ்தி. காதில் ஒன்றுமில்லாமல் இருக்கும் பெண்களை ஒரு பொட்டுக் கம்மலையாவது போடக்கூடாதுஎன்று கடிந்துகொள்ளும் பெரியவர்கள் இருக்கிறார்கள். இந்திய பண்பாட்டில் காது குத்தல்என்கிற பழக்கத்தை யார், எப்போது ஏற்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு காதணி’… ஆண்களுக்கு கடுக்கண்’. ‘தோடுடைய செவியன்என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் பாடிய பாடல் வெகு பிரபலம்.
எவ்வளவு அணிந்தாலும் தோடு’, ‘கம்மல்’, ‘ஜிமிக்கிமோகம் பெண்களுக்குத் தீர்ந்தபாடாக இல்லை. மாறும் காலத்துக்கேற்ப அவ்வப்போது புதுப்புது ரகங்களையும் வடிவங்களையும் தேடி ஓடியபடியே இருக்கிறார்கள். உடைக்கு மேட்ச்சான ஃபேன்ஸி கம்மல்கள்தான் காலேஜ் பெண்களின் இப்போதைய சாய்ஸ்!
மனசுக்கு பிடித்த டிசைன்கள், குறைந்த விலை, வித்தியாசமான கலர்கள் என எல்லாமே இந்த ஃபேன்ஸி கம்மல்களில் கிடைக்கின்றன. அதனால் நாளொரு கம்மல் பொழுதொரு வண்ணம்என்று ஃபேஷன் அப்டேட் செய்து கொள்கிறார்கள் பெண்கள்!சிம்பிள் இயர் ரிங்முதல்கிராண்ட் லுக் தோடுவரை மார்க்கெட்டில் உள்ள ஹாட் டிசைன்கள் உங்களுக்காக
தகவலுக்கு நன்றி.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home