இந்தியா மத சார்பற்ற நாடா ? !
ஒரே
வித சம்பவங்களில் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகள்!'
ஏறக்குறைய ஒரே சம்பவங்கள். இரண்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஊடகங்கள் செய்தியை எப்படி வடிவமைக்கின்றன பாருங்கள்! ஒரே தேசத்தின் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏன்?
ஒரே குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு தரப்பு தீவிரவாதிகள் என்றால்.. அதே குற்றச்சாட்டுக்கு ஆளான இவர்களை அதே பெயரில் ஏன் அழைக்கக் கூடாது?
source: http://mrpamaran.blogspot.in/2013/11/blog-post_7262.html
ஏறக்குறைய ஒரே சம்பவங்கள். இரண்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஊடகங்கள் செய்தியை எப்படி வடிவமைக்கின்றன பாருங்கள்! ஒரே தேசத்தின் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏன்?
ஒரே குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு தரப்பு தீவிரவாதிகள் என்றால்.. அதே குற்றச்சாட்டுக்கு ஆளான இவர்களை அதே பெயரில் ஏன் அழைக்கக் கூடாது?
source: http://mrpamaran.blogspot.in/2013/11/blog-post_7262.html
அருமை முகநூல் சகோதரர்களே !...குறிப்பாக மாற்று மத சகோதரர்களே !.... நீதி பற்றி அல் குர்ஆன் சொல்வதை படித்து பாருங்கள்
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
4:58. நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
ஜாதி இன வேற்றுமை பாராமல் எல்லா மக்களுக்கும் நீதி பாரபட்சமில்லாமல் வழங்கப்பட வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது ....
அரசாங்கமும் , நீதி துறையும் , போலீஸும் , ஊடகங்களும் பாரபட்சமில்லாமல் செயல்பட்டால்தான் இந்தியா மத சார்பற்ற நாடு என சொல்ல முடியும் ... நடக்குமா ?????????????!!!!!!!!!!.....
அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home