24 December 2013

இன்டர்நெட் யூஸ் பண்றீங்களா? அப்போ கண்டிப்பா இதையும் செய்யுங்க.



இன்டர்நெட் யூஸ் பண்ணாதவங்களே இப்போ இருக்க முடியாதுங்கஎந்த நேரத்திலும் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருந்துட்டே இருக்கிற நண்பர்கள் அதிகம்.
அதே மாதிரி ஜிமெயில் யூஸ் பன்றவங்க நிறைய பேர்..
உலகத்தில் 90 சதவிகிதம் பேர் ஜிமெயில் யூஸ் பண்றாங்கன்னு ஒரு அறிக்கை சொல்லுதுங்க
கூகிள் தளம் பிரபலமானதுக்கு இந்த ஜிமெயில் சேவையும் ஒரு காரணம்… 
இப்படி இன்டர்நெட்ல இருக்கிற எத்தனையோ யூஸ்புல் வெப்சைட்டை நாம தினமும் பயன்படுத்தறோம்.
பைல் சேரிங் சைட்..(File Sharing Websites) இமேஜ் சேரிங் சைட்…(Image File Sharing Websites) இலவச வெப்சைட் தொடங்கும் வைப்சைட்ன்னு..(Free Website making Sites) நிறைய தளங்களுக்கு நமக்கு யூஸ்புல்லா இருக்குங்க
குறிப்பா நாம் மெயில் சர்வீஸ் (E-Mail Service) கொடுக்கிற தளங்களை ரெம்பவே நம்பி இருக்கிறோம்.
எந்த ஒரு பைல் ஆனாலும், டாக்குமெண்ட் ஆனாலும்எப்படிப்பட்ட விஷங்களாக இருந்தாலும் இந்த மெயில் மூலம் நான் அனுப்பி, பகிர்ந்துக்கிறோம்.
நிறைய காண்டாக்ட்ஸ் மெயில், அலுவலக ரீதியான கோப்புகள் இப்படி இருக்கிற டாக்குமெண்ட்களை நிறையபேர் சேமித்து பாதுகாப்பா வைக்கிறதே இல்லை.. அதுதான் மெயில்ல இருக்கேதேவைப்படுகிற போது எடுத்துக்கலாம் என்று அசால்டாக பதில் சொல்வார்கள்..
அது உண்மைதான்.. இருந்தாலும் உங்களோட எந்த வொரு வெப்சைட் கணக்கா இருந்தாலும், உங்களோட பாஸ்வேர்ட் உங்களுக்கு மட்டுமே தெரியிற வரைக்கும்தான் பாதுகாப்பு
அதே பாஸ்வேர்டை நண்பர்களோ.. அல்லது ஹேக்கர்ளோ ஹேக் பண்ணிட்டா அப்புறம் அவ்வளுதான்
அவங்க கைவசம் உங்களோட மெயில், பைல்…. முக்கியமான தகவல்கள் எல்லாம் போய் சேர்ந்திடும்….
இதுக்கு என்ன செய்யலாம்..?
ஒரே வழி.. பாஸ்வேர்ட் பாதுக்காப்பானதாக அமைப்பதுதான்
பாதுகாப்பானதா அமைக்கிறதுக்கு நிறைய பாஸ்வேர்ட் மேனேஜர் சாப்ட்வேர்கள் இருக்குங்க….
அதைப் பயன்படுத்தலாம். இந்த பாஸ்வேர்ட் மேனேஜர் சாப்ட்வேர்கள் என்ன செய்யுதுன்னா…. நீங்க பயன்படுத்துற ஒவ்வொரு தளத்திற்கு புதுசா யுனிக் பாஸ்வேர்ட் அமைச்சுக்கொடுக்கும்
ஏற்கனவே ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் எப்படி கொடுக்கிறதுன்னு ஒரு சில பதிவுகள் எழுதியிருக்கிறோம்.. அதையும் படிச்சுப் பாருங்க
1. பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி?
அதேபோல நீங்க பைல் ஷேரிங் சைட்ல உங்களுடைய முக்கியமான கோப்புகளை ஷேர் செய்து வச்சிருந்தீங்கன்னகண்டிப்பா அந்த மாதிரி சைட்களுக்கு உங்களோட பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்ட்ராங்கவும், யுனிக்காவும் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் உங்களோட முக்கியமான டாக்குமெண்ட்களை பறிபோக வாய்ப்பு ஏற்படும்.
2. Two Step Verification:
கிட்டதட்ட அனைத்து முக்கியமான சோசியல் வெப்சைட்கள் அனைத்தும் 2 Step verification முறையை கொண்டு வந்திருக்கு. குறிப்பா சொல்வதெனில் கூகிள் தளத்தின் Two Step Verification: இந்த முறையில் உங்களுடைய கணக்கில் செயல்படுத்தினால் உங்களைத் தவிர வேறு யாருமே உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்யவே முடியாது.
முதலில் நீங்கள் உங்களோட ஜிமெயில் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்தால் உங்களோட மொபைலுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் கிடைக்கும். அதில் இருக்கிற எண்களை நீங்கள் உள்ளிட்டால் மட்டுமே உங்களுடைய கூகிள் அக்கவுண்ட்டை அணுக முடியும்.
யாராவது உங்களுடைய அக்கவுண்டை ஹேக்பண்ணினாலும் மொபைல் வெரிபிகேஷன் செய்தால் மட்டுமே அதைத் திறக்க முடியும். இந்த முறையில் உங்களோட அக்கவுண்ட்டை நீங்கள் வைத்துக்கொண்டால், வேறு யாராலும் உங்களோட ஜிமெயில் அக்கவுண்டைப் பயன்படுத்தவே முடியாது.
3. Data Encryption
இந்த முறையில் நீங்கள் ஒரு தகவலை உங்களோட நண்பர்களுக்கு அனுப்பும்போது அதை என்க்ரிப்ட் செய்து அனுப்புவது. அதாவது அனுப்பக்கூடிய தகவல்களை நேரடி தகவல்களாக அனுப்பாமல் குறியாக்கம் செய்து அனுப்பும் முறையாகும். அக்கோப்பை மற்றவர்கள் திறந்தால் அதில் வெறும் குறிமுறைகள் மட்டுமே தெரியும். அதைப் படித்தறிய முடியாது.
மீண்டும் அதை படிக்க வேண்டும் என்றால், எந்த முறையில் குறியாக்கம் செய்திருக்கிறமோ அதற்குரிய சரியான கீவேர்டை கொடுத்து அக்கோப்பினைத் திறந்தால் மட்டுமே, கோப்பில் உள்ள முழுமையான வாசகங்களைப் படிக்க முடியும்.
இந்த முறையை மிக மிக முக்கியமான கோப்புகளை அனுப்பும்போது பயன்படுத்தலாம்.
Browser Selection பிரௌசர் தேர்ந்தெடுப்பு:
இணையத்தைப் பயன்படுத்த பல்வேறு பிரௌசர்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அனைத்து பிரௌசர்களும் இணைய உலவலில் பாதுகாப்புகளை கொடுக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது உள்ள பிரௌசர்களிலேயே கூகிள் குரோம் மட்டுமே சரியான முறையான பாதுகாப்பை அளிக்கிறது.
அடுத்து பயர்பாக்ஸ் பிரௌசர்…. முன்னணியில் இருப்பது கூகிள் பிரௌசர் மட்டுமேஇது safe browsing tools, sandbox, speedy patching and automatic/silent updating இப்படிப்பட்ட பாதுகாப்புகளை சிறப்பாக கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவு இல்லாமலேயே பிரௌசர் தானியங்கியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்டேட் செய்துகொள்கிறது.
குரோம் பிரோசரில் இருக்கும் ஒரு பயனுள்ள  எக்ஸ்டன்டச் KB SSL Enforcer. இது என்ன செய்யும் என்றால், நீங்கள் கூகிள் குரோம் பிரௌசர் மூலம் இணையத்தில் தகவல்களை பரிமாறும்பொழுது , டேட்டாக்களை தானாகவே என்க்ரிப்சன் செய்துவிடுகிறது. இதனால் உங்களுடைய தகவல்களை இடையில் யாரும் தடுத்து நிறுத்தி அவற்றைப் பார்த்திட முடியாது.
Data Backup ரொம்ப முக்கியம்
எப்படிப்பட்ட முக்கிய கோப்பாக இருந்தாலும், என்னதான் பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தியிருந்தாலும் டேட்டா பேக்கம் ரொம்ப முக்கியங்க.. முக்கியமான கோப்புகளை, படங்களை, பேக்கப் எடுத்து தனியா வச்சிக்கிறது மிகப்பெரிய பாதுகாப்பு விஷயம்..
2. உங்களோட தகவல்களை பேக்கப் எடுக்க
என்ற இப்பதிவு உங்களுக்குப் பயன்படும். இதுல பேக்கப் எடுப்பது குறித்தான முழுவிபரங்களும் இருக்கு. அதேபோல எடுக்கப் பயன்படும் சாப்ட்வேர் பற்றிய தகவல்களும் இருக்கு.
அதேபோல் தகவல்களை பேக்கப் எடுக்க Online Backup Service ஐயும் பயன்படுத்தலாம். ஆன்லைன் மூலம் உங்களுடைய தகவல்களை பேக்கப் எடுத்து சேமிக்க iDrive, Mozy மாதிரி ஒரு சில முக்கியமான தளங்கள் இருக்கு…. அதை யூஸ் பண்ணிக்கலாம்.
Java Program தேவையா?
பெரும்பாலான கம்ப்யூட்டர்ல ஜாவா கண்டிப்பா இருக்கும்.. ஏன் எல்லா கம்ப்யூட்டர்லேயேயும் ஜாவா புரோகிராம் இருக்கும். இது எதுக்குன்னா..இன்டர்நெட் யூஸ்பன்றவங்களுக்கும் உபயோகமா இருக்கும். விபரமா தெரிஞ்சுக்க கீழ இருக்கிற லிங்கை கிளிக் பண்ணிப் படிச்சுப் பாருங்க
3. ஜாவா புரோகிமில் வைரஸ்
இதுல இருக்கிற ஒரு பெரிய ஆபத்து என்னனாஇது இயங்கினால், பிரௌசர் மூலம் வைரஸ் மாதிரியான புரோகிராம்கள், ஹேக்கர்களுக்கு ஈசியான வழியை அமைச்சுக்கொடுத்துடும். அதுதான் பிரச்னையே
இதுக்கு தீர்வுஒன்னுஜாவா புரோகிராமை புதுசா அப்டேட் பண்ணனும்.. இல்லேன்னா தேவையில்லாத பட்சத்தில் அதை அப்படியே அன் இன்ஸ்டால் பண்ணிடனும்..
இப்படி நிறைய விஷயங்கள் இருக்குங்க.. அதோடு மட்டுமில்லாமல் டெம்ப் பைல் டெலீட் பன்றது.. குக்கீஸ் டெலீட் பன்றது.. ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்தறதுன்னுஏகப்பட்ட விஷயங்களும் உண்டு….
External Drive:
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் டிரைவில்தான் (Hard Disk Drive) உங்களோட பைல்களை சேமிச்சு வச்சிருப்பீங்கவேற வழிகள்லயும் டேட்டாவை சேமிக்கலாம்.. பென்டிரைவ் , மெமரி கார்ட்ன்னு (Pendrive, Memory Card, SD card ) நிறைய எக்ஸ்டர்னல் ஐட்டம் இருக்கு. ஆனால் நிறைய டேட்டாக்களை அதில பதிய முடியாது.. அதனால ஒரு External Drive கண்டிப்பா வாங்கி வச்சிக்கோங்க
அதுல உங்களோட முக்கியமான டேட்டாக்களை பேக்கப் எடுத்துத வச்சிக்கலாம்.. கம்ப்யூட்டரே ஏதாவது பிரச்னை வந்து முடங்கினாலும், அந்த டேட்டாவை அந்த எக்ஸ்டர்னல் டிரைவிலிருந்து எடுத்துக்கலாம்.
இந்த எக்ஸ்டர்னல் டிரைவ் 3000 த்திலிருந்து கிடைக்குதுங்கஉங்களுடைய தகவல்கள் ரொம்ப முக்கியம்ங்கஅதுக்காக மூணாயிரமோ, நாலாயிரமோ செலவு செய்றதில தப்பே இல்லீங்க..
இதுபோன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தினால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டரும் பாதுகாப்பானதாக இருக்கும்….
ட்ரைப் பண்ணிப் பாருங்களேன்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home