2 December 2013

மோடியுடன் இளம் பெண் – பரபரப்பான புகைப்படம் வெளியீடு !படங்கள் இணைப்பு!!





பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்த விவகாரத்தில் இளம் பெண்ணுடன் மோடி உரையாடும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் குஜராத்தில் இளம்பெண் ஒருவரை அப்போதைய மாநில உள்துறை அமைச்சரும், நரேந்திரமோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷா உளவுத் துறையை வைத்து பின் தொடர்ந்து கண்காணித்ததாக தகவல் வெளியாகியது.
இது தொடர்பாக அமித் ஷாவுக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், அது ரகசியமாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இணையதளத்தில் ஆதாரத்துடன் செய்தி வெளியாகியது.
மேலும் இவ்விவகாரம் அம்பலமானதும், ‘மோடிக்காகவே அப்பெண் பின் தொடரப்பட்டாள்என்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய அந்த இளம் பெண்ணுடன் மோடி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஷரத் உத்சவ்என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மோடி கட்ச் பகுதிக்கு வந்தபோது பெங்களூரை சேர்ந்த கட்டிடக் கலை நிபுணரான அந்த 27 வயது இளம்பெண்ணை மாவட்ட கலெக்டர் பிரதீப் சர்மா மோடிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் பின்பு மோடி அந்த இளம் பெண்ணிடம் தனது தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அளித்துள்ளார். அதன் பின்னர் மோடிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் ஏராளமான கருத்து பரிமாற்றங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home