16 December 2013

பெட்ரோல் பங்க் கொள்ளை - உஷார் மக்களே.



ரெண்டாவது தடவையா பெட்ரோல் பங்க்ல ஏமாந்த பெட்ரோல திரும்ப பெற்ற நாள் இன்று.

கடந்த மே மாதம் கிண்டி பாரத் பெட்ரோலியம் பம்ப்ல 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கன்னு (தெளிவா) சொன்னேன். (50 ரூவாய்க்கு மேல பெட்ரோல் போடுறதெல்லாம் நம் அவைக்குறிப்பில் இடம்பெறும்) கேஷ் குடுங்கன்னு கேட்டார் பெட்ரோல் போடுறதுக்கு முன்னாடியே. குழம்பிகிட்டே பணத்த எடுக்குற சில நொடிகளில் மீட்டர் 50 ரூபாய்ல நின்னுடுச்சி. என்னனு கேட்டதுக்கு நீங்கதானே 50 ரூபாய்க்கு போட சொன்னீங்கன்னார். இல்ல 200க்குனு சொன்னேன். 150 க்கு மறுபடியும் போட்டார். வண்டிய மெல்ல நகத்தி முன்னால போய் நின்னுட்டேன். (ஏமாந்த மாதிரியே ஒரு உள்ளுணர்வு) மேனேஜர்கிட்ட நடந்தத சொன்னதும், அவர ரூமுக்கு வர சொல்லி ஒரே ஒரு கேள்விதான் கேட்டார், "பெட்ரோல் போடுறதுக்கு முன்னாடி பணம் கேட்டியா?"னு. அவர் ஆமாம்னு சொன்னதும், எனக்கு ஸாரி சொல்லி 50ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு அனுப்பிட்டார். (நடுவுல அந்த 50 ரூபாய்க்கு நான் எவ்ளோ கஷடப்படுறேன்னு சொன்னதும், கஸ்டமர டைவட் பண்ணிருக்கனு மேனேஜர் கெட்ட வார்த்தைல திட்டனுதும் நடந்துச்சு).

அடுத்து நேத்து காலைல ஊரப்பாக்கம் இண்டியன் ஆயில் பம்ப்ல அதே 200 க்கு போட சொன்னேன். அந்த தம்பி வித்தியாசமா 20 ரூபா சில்லரை கேட்டார். எதுக்குனு கேட்டதுக்கு, மூணு லிட்டரா ரவுண்டா போட்டுடுறேன்னார். (பால் பண்ணைல வேலை பாத்தவரு போல) சரினு சில்லரை எடுக்குறதுக்குள்ள (சில நொடிகளில்) 175 ரூபாய தாண்டி ஓடிட்டு இருந்துச்சு. 210 க்கு போட்டுட்டு (ஏமாந்த அதே உள்ளுணர்வோடு) கெளம்பிட்டேன். நேத்து பூரா உறுத்திகிட்டே இருந்துச்சு. காசு கெடைக்கலனாலும் பரவால்ல கேட்க வேண்டும். வேலை முடிச்சிட்டு ராத்திரி 11 மணிக்கு போனேன். மேனேஜர்ட்ட சொன்னேன். விசாரிக்கிறேன் சார் அந்த பையன் காலைல வருவார்னு சொன்னார். இன்னைக்கு காலைல போனேன். எதுவும் பேசாமல் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு அனுப்பிட்டார். (அங்க பலர் 'ரவுண்டா'தான் போடுவாங்கனு அப்புறம்தான் தெரிஞ்சது).

இனி...

ஜீரோ பாக்காம பெட்ரோல் டேங்க திறக்கவேமாட்டேன்.
பெட்ரோல் போடுறதுக்கு முன்னால காசு கேட்டா தரமாட்டேன். தூசு இருக்குனு சொன்னா தொடைக்கமாட்டேன், பின்னாடி வீல் இல்லனு சொன்னாகூட பாக்கமாட்டேன்.
பின்னால ஒரு பக்கம் பெட்ரோல் பங்க்கே தீப்பிடிச்சாலும் ஜென் நிலைல மீட்டரத்தான் பாப்பேன்.

#ஃப்ரீ அட்வைஸ் உங்களுக்கும்தான்.

-
முத்து ராம்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home