8 December 2013

பாலில் யூரியா , சீன பவுடர் , மைதா மாவு கலந்து விற்பனை .....



அதிர்ச்சி தகவல் : இன்றைய நாளிதழில் வந்த செய்தி - பாலில் யூரியா , சீன பவுடர் , மைதா மாவு கலந்து விற்பனை .....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் 33 சதவீதம் பாலில் கலப்படம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோ தெரிவித்தார். யூரியா, சீன பவுடர், மைதா மாவு போன்றவற்றை பாலில் கலப்பதால், குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாலில் கலப்படம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அதற்கேற்றபடி சட்டத்தில் திருத்தங்களை மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டது.

இதுதொடர்பாக இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழகக் கிளை தலைவரும் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநருமான எஸ்.இளங்கோ கூறியதாவது:

உணவுப் பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம்-2006-ல், உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,500 அபராதம் என்று மட்டுமே உள்ளது. இதனால், குற்றவாளிகள் அபராதத் தொகையை கட்டிவிட்டு எளிதாக வெளியே வந்துவிடுகின்றனர்.

அதன்பின், மீண்டும் உணவில் கலப்படம் செய்யும் வேலையைத் தொடர்கின்றனர். இந்நிலையில், உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அதற்காக மாநில அரசுகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

உணவிலேயே மிகவும் முக்கியமானது பால். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பால் கட்டாயம் தேவைப்படுகிறது.

எங்கள் சங்கம் நடத்திய ஆய்வில், நாட்டில் 65 சதவீத மக்கள் பாலை ஏதாவது ஒரு வகையில் உணவாக பயன்படுத்துகின்றனர். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் 57 சதவீதம் பாலில் கலப்படம் உள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பாலை ஆய்வு செய்தபோது, அதில் 33 சதவீதம் கலப்படம் இருந்தது தெரியவந்தது.

கலப்பட வகைகள்

பாலில் தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்கின்றனர். மேலும் பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்களை மட்டும் அகற்றிவிடுகின்றனர். இதனால், பாலின் கெட்டித் தன்மை போய்விடுகிறது. கெட்டித் தன்மைக்காக பாலில் கிழங்கு மாவு, மைதா மாவு மற்றும் அரிசி மாவை கலக்கின்றனர். இது தவிர, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை மாவை பாலில் கலக்கின்றனர். சீன வெள்ளை மாவு கலந்த பால், சென்னைப் புறநகர் பகுதிகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. இதைவிடக் கொடுமையானது பாலின் கெட்டித் தன்மைக்காக யூரியாவை கலப்பது. 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் யூரியா கலக்கப்படுகிறது.

தயிரின் தரம்

தண்ணீர் கலந்த பாலை தயிராக்கும்போது, பால் தனியாகவும் தயிர் தனியாகவும் இருக்கும். மாவு கலந்த பாலை தயிராக்கினால் தயிர் தனியாகவும் அதில் கலக்கப்பட்ட மாவு கட்டிக் கட்டியாக தனியாக இருக்கும். மேலும் புளிப்பும் அதிகமாக இருக்கும். யூரியா கலந்த பாலை தயிராக்கும்போது, அந்தத் தயிரில் எண்ணெய் அதிகமாக இருக்கும்.

கலப்பட பாலை உட்கொள்வதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் டைபாய்டு, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி தடைபடுதல், நிமோனியா காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். யூரியா கலந்த பாலினால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படும். ஒரு சில நேரங்களில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குறிப்பு : தி இந்து செய்தியில் இன்று வெளியாகியிருக்கும் தகவல் http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகத்தில்-33-பாலில்-கலப்படம்-யூரியா-சீன-பவுடர்-மைதா-மாவை-கலக்கும்-கொடூரம்/article5431427.ece

ஆவின் பாலில் கலப்படம் இல்லை
மதுரை, மார்ச் 20, 2013..http://foodsafetyupdate.wordpress.com/2013/03/20/ஆவின்-பாலில்-கலப்படம்-இல/

ஆவின் பாலில் கலப்படம் எதுவும் செய்ய வில்லை என ஆய் வில் தெரியவந்ததாக கலெக் டர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ஆவினுக்கு வரும் பாலில் வேதிப்பொருள் கலந்து அனுப்பப்படுகிறது. கேரளாவில் இருந்து வேதிப்பொருள் கொண்டு வந்து பாலில் கலப்பதாக கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.

புகார் தொடர்பாக கலெக்டர் அன்சுல்மிஸ்ரா விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆவின் அதிகாரிகள் செல்லம்பட்டி சரக பால் சங்கங்களில் கொள்முத லை நேரடியாக ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக கலெ க்டர் அறிக்கை: ஆவினுக்கு வரும் பால் நன்றாக பரிசோ தனை செய்யப்ப டுகிறது. இதில் ரசாயண பொருள்கள் எதுவும் கலக்க வில்லை. தரமான பால் நுகர்வோரு க்கு பாக்கெட் மூலம் விற்ப னை செய்யப்படுகிறது. பொ துமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். இவ் வாறு தெரிவித்துள்ளார்.

கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை

டெல்லி: பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பால் சாம்பிள்களை வாங்கிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதை பரிசோதித்தபோது பல இடங்களில் பாலில் கலப்படம் செய்தது தெரிய வந்தது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/make-milk-adulteration-punishable-with-life-imprisonment-sc-188941.html


வியாபாரம் மற்றும் வியாபாரிகள் பற்றி இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்).http://mutur1st.blogspot.com/

அன்பான வியாபாரிகளே! நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள்! எது ஹராம்? எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள்! விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள்! விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள்! அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள்! கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள்! உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்!
ஜஸாக்கல்லாஹ் கைர் அபூவஸ்மீ

நன்றி : பல இணைய தளங்கள்

அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்



ஆவின் பாலில் கலப்படம் இல்லை என கலெக்டர் உறுதி அளித்திருக்கிறார் ... இது போன்று உறுதி செய்யப்பட்ட பிராண்டுகளின் பாலை மட்டுமே மக்கள் வாங்கி உபயோகிப்பது நல்லது ... கலப்பட பால் ஒழிவதற்கும் இது நிச்சயம் வழி வகுக்கும் இன் ஷா அல்லாஹ் ......
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home