6 December 2013

ஜாகிர் நாயக் அவர்களிடம் கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார் அந்த கேள்வியையும், அதற்க்கு அளித்த பதிளையும் இங்கே...



... ஜாகிர் நாயக் அவர்களிடம் கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார் அந்த கேள்வியையும், அதற்க்கு அளித்த பதிளையும் இங்கே... கேள்வி :- நானும் என்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரும் உயிருக்கு உயிரா நேசிக்கின்றோம் (காதல்) ஆனால் எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது . காரணம் நான் இந்து , அவர் முஸ்லீம் அவர் வீட்டில் என்னை முஸ்லீமாக மாற வற்புறுத்துகின்றனர் என் வீட்டில் அவரை இந்துவாக மாற வற்புறுத்துகின்றனர் நன்றாக புரிந்து கொண்ட நாங்கள் இருவரும் ஏன் அவர் அவராகவும் ! நான் நானாகவும் திருமணம் செய்து வாழ முடியாது ? பதில் :- அம்பாஸிடர் காருக்கு நான்கும் அம்பாஸிடர் சக்கரம் போட்டால் வண்டி சமமாக நெடிய பயணம் செல்லலாம் ! ஒரு சக்கரம் அம்பாஸிடர் சக்கரமும் ஒரு சக்கரம் ட்ராக்டர் சக்கரமும் போட்டால் வண்டி சமமாக செல்லாது . ஒரு பக்கம் உயரமாகவும் , ஒரு பக்கம் சாய்வாகம் வாகனம் சென்றால் நெடிய பயணம் செல்ல முடியுமா ? திருமண வாழ்க்கை என்பது இரண்டு பேரும் புரிந்து நல்ல வாழ்க்கை வாழந்து நெடிய பணம் செல்ல வேண்டும் . கேள்வி :-அப்படி என்றால் நான் முஸ்லீமாக வேண்டுமா ? பதில் :- நீங்கள் படித்தவர்கள் குர் ஆன் , ஹதிஸையும் , இந்து தர்மத்தையும் இரண்டையும் படியுங்கள் இந்த உலக வாழ்வையும் , மறுமை வாழ்வையும் வெற்றி அடையகூடிய மார்கம் எது என நீங்களே தேர்வு செய்து நல்ல வாழ்க்கை வாழுங்கள் . (குறிப்பு :- அடுத்த நாள் அமர்வில் அந்த பெண் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விடுகின்றேன் என கூறினார் என்பது குறிப்பிடதக்கது) ''லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' 'வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார்' - என்பதுதான்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home