கொடைக்கானல் பாதையை வடிவமைத்த கான்சாஹிப் என்ற மருதநாயகம்.....!!
மருதநாயகம் என்ற
யூசுப் கான்சாஹிப் (மதுரை?)RAMANATHAPURAM மாவட்டத்தில் உள்ள பனையூரில் பிறந்தவர்.
ஹைதர் அலி மற்றும் பூலித்தேவன் காலத்தில் வாழ்ந்ததாகவும் அறியப்படுகிறது. 1764 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி எழுதிய கடிதம் ஒன்று இதற்கு ஆதாரமாக விளங்குகிறது.
இளமைப்பருவம் :
கான்சாஹிப் சிறுவனாக இருந்த போது அனைத்து கலைகளிலும் திறமையாக இருந்துள்ளார். தையல், படகோட்டுதல், குதிரை ஏற்றம், விளையாட்டு வீரர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் போர்களத்தில் போர்புரிவதிலேயே மிகுதியான ஆர்வம் காட்டியுள்ளார். மேலும் எந்த விளையாட்டானாலும் அந்த விளையாட்டில் மருதநாயகம் முதன்மையாக விளங்குவார்.
கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம். அவருடைய தந்தை முஸ்லிம் மத போதகர். கான்சாகிப் தூக்கிலிடப்பட்டு ஏழு நாட்கள் கழித்து ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு ஆங்கிலேய அதிகாரி எழுதிய கடிதத்தில் கான்சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதைக் குறிப்பிட்டு இறுதியில் "கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்" (Khan sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation -YusufKhan by.S.C.Hill.P.286) என்று எழுதியுள்ளார். இதிலிருந்து கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவுமில்லை; மருதநாயகம் வேளாளர் சமூககத்திலுள்ளவர் இல்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது.
அதே வேளையில் அவருடைய மூதாதையர்கள் பிறமதத்திலிருந்து மதம் மாறியிருக்கலாம். தஞ்சாவூரைத் தலைமையகமாகக் கொண்ட பிரதாப் சிம்ஹான் என்ற மன்னனிடம் படைவீரனாக வாழ்க்கையை துவக்கினார் கான்சாகிப். இதுதான் அவர் சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொள்வதற்கு வித்திட்டது. அதன் பின்னர் புதுச்சேரி சென்றார். அங்கு சென்ற பின்பு அங்கேயும் தன்னை படைவீரனாக இணைத்துக்கொண்டார். இவருடைய திறமை, போர்நுட்பம், எதிரிகளைத் தாக்கும் தன்மை இதனால் பிரெஞ்சுப்படையில் வேகமாக முன்னேறினார்.
மன்னர் ஒளரங்கசீப் மறைந்த பின்பு ஆங்காங்கே நவாப்கள், கர்நாடகா நவாப், ஆற்காடு நவாப் மன்னர்கள், குறுநில மன்னர்கள் என சிற்றரசுகள் என தோன்றின. அச்சமயம் முகமது அலியும், சாந்தா சாகிபும், நேருக்கு நேர் மோதிக்கொண்டார்கள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல சாந்தா சாகிபிற்கு ஆதரவாக பிரெஞ்சுப்படையினரும், முகமது அலிக்கு ஆங்கிலேயப்படைகளும் ஆதரவளித்தன. இதன் நோக்கம் ஆதிக்கப்போட்டியும், வணிகமும் பின்புலமாக இருந்தது.
திருச்சியை மையமாகக்கொண்டு சாந்தாசாகிப் செயல்பட்டார். சாந்தா சாகிப் 1751 ஆம் ஆண்டு போரில் ஆற்காட்டில் தோல்வியடைந்தார். இறுதியில் சாந்தா சாகிப்புடைய உடல் திருச்சியில் நத்தர் ஷா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டைத் தலைநகராகக்கொண்டு வலிமையான அரசாக ஆற்காடு திகழ்ந்தது. ஆற்காடு நவாப் படைகள் அதிகமாகவும், வலிமையாகவும் இருந்தன. இந்நிலையில் ராபர்ட்கிளைவ் ஆற்காடு நவாபின் அனுமதியுடன் முதன் முதலாக தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேய படைகள் கால் பதித்தன. அதன் பின்னர் ஹைதர் அலியும், மருதநாயகமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் மருதநாயகம் திண்டுக்கல் பகுதியில் வெற்றிபெற்றார். இவர்களுக்கு இடையிலான போர் பின்னணியில் ஆற்காடு நவாபின் சூழ்ச்சி இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் 6.11.1759 ஆம் ஆண்டு பூலித்தேவனுக்கும் மருதநாயகத்திற்கும் போர் நடந்தது. இதில் மருதநாயகம் தோல்வியைத் தழுவினார். மீண்டும் பூலித்தேவனுக்கும் மருதநாயகத்திற்கும் 12.12.1760 ஆண்டு நெல்கட்டான் செவலில் போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் வென்றார். அதன் பின்னர் 1759 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தென்மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகெங்கை பகுதிகளுக்கு மருதநாயகத்தை கவர்னராக நியமித்தனர்.
பொதுப்பணித்துறையின் முன்னோடி :
நாட்டின் வளத்தைப் பெருக்குவதிலும், விவசாயத்தைப்பெருக்குவதிலும் குறியாக இருந்து பல கிராமங்களை உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட கான்சாகிப்புரம், கான்சாமேடு, மேட்டுத்தெரு, கான்பாளையம் போன்ற ஊர்கள் மதுரையில் உள்ளன. இதே போல விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே உள்ள கூமாபட்டியில் உள்ள கான்சாகிப்புரம், திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அணைக்கட்டு ஒன்றையும் கட்டினார். திருநெல்வேலியில் மேட்டுக்கால்வாய் திட்டத்தை உருவாக்கி பாசனவசதியை ஏற்படுத்தினார். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் மம்சாபுரம் போன்ற ஊர்களையும் உருவாக்கினார்.
குளுகுளு கொடைக்கானல் :
கொடைக்கானலுக்கான மலைப்பாதையை வடிவமைத்ததும், உத்தமபாளையத்தில் இருந்து கம்பதிற்கு செல்கின்ற பாதையும் இவரது காலத்தில் வடிவமைக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து கம்பம் வரை நெடுந்தொலைவு பாதையும் இவரால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் 13.10.1764 ஆம் ஆண்டு தொழுதுகொண்டிருந்தபோது நயவஞ்சகமாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருமுறை தூக்கிலிடப்பட்டபோதும்கூட அவர் இறக்கவில்லை. மூன்றாவது முறையாக தூக்கிலிடப்பட்டபோது அவர் உயிர் துறந்தார். அவருடைய உடல், கை, கால் என பலவாறு வெட்டப்பட்டு அவருடைய தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், மற்றொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், மற்றொரு கால் பாளையங்கோட்டையிலும் உடல் மதுரையிலும் அடக்கம் செய்யப்பட்டது.

டும்
இந்த பதிவில் வழங்கியுள்ளோம்...)
தொகுப்பு மற்றும் களஆய்வு : வைகை அனிஷ், இந்நேரம்
-அஷ்ரப்தொகுப்பு மற்றும் களஆய்வு : வைகை அனிஷ், இந்நேரம்
1 Comments:
hello sc hill book pdf send me
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home