11 December 2013

வருங்கால IAS அதிகாரிகளே...



சிறுபான்மைச்சமுதாய மாணவர்களுக்கு இலவச IAS பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. உரிய காலத்தில் இது பயன் படுத்தப்படாவிட்டால் வழக்கம்போல திரும்பிச் சென்று விடும்..பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதில் சேரத் தகுதி உடையோர். சென்னை மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வெளியூர் மாணவர்களுக்கு ரூ2000 உதவித்தொகையும் உண்டு..

ஆர்வமுடையோர் நமது கல்வி வழிகாட்டல் ஒருங்கிணப்பாளர் பேரா.எம்.எஃப்.கான் அவர்களைத் தொடர்பு கொள்க. அவரது அலைபேசி எண்கள் 9840259611, 9677109759.

வாரம்தோறும் டயாலிஸிஸ் அண்மையில் ஏற்பட்ட ஒரு எலும்பு முறிவினால் 1 மாதம் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை இதனிடையே சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து சிந்தித்து வருபவர் பேரா எம்.எஃப்.கான் அவர்கள்..சிலநேரம் அதிகாலை 3.30 மணிக்கு கூட உரிமையோடு என்னை எழுப்பி கல்விமுன்னேற்றத்திற்கு செய்யவேண்டிய பணிகள் குறித்துக் கட்டளையிடுவார்.

அவர் பூரண நலம் பெற பிரார்த்தியுங்கள்.....கிரசன்ட் IAS அகாடமி, அண்ணா IAS அகாடமி ஆகிய நிறுவனங்கள் மூலம் அவர் ஆற்றிவரும் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

- தகவல் பேராசிரியர் ஹாஜா கனி:
Source: சமுதாய உரிமை FB Page
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home