14 December 2013

முஸஃபர் நகரில் இனி ஒரு குழந்தை கூட மரணிக்கக் கூடாது : உச்சநீதிமன்றம்......!!



முஸஃபர் நகர் அகதிகள் முகாமில் நிலவும் துயரமான சூழல்குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. முகாம்களில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவுக்குள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உ.பி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கியுள்ள முகாம்களில் குளிரை தாங்க முடியாமல் 40 குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் கடுமையான கவலையை வெளிப்படுத்தியது. குளிர்காலத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு இன்றே மேற்கொள்ளவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறும். அதற்குள் குழந்தைகளின் மரணம் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திறந்தவெளி முகாம்களில் தங்கியிருப்போர் நரக வேதனையை அனுபவிக்கின்றார்கள். குளிர்காலத்தில் இது தீவிரமடையும். நாமெல்லாம் நீதிமன்ற அறைகளில் சுகமாக இருக்கிறோம்.

அதேவேளையில் அகதிகள் திறந்த வெளிமுகாம்களில் குளிரில் வாடுகின்றார்கள். அரசு உடனடியாக இதுக்குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக உ.பி அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தின் அவையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எடுத்துரைத்தார்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home