தண்ணீர் வரி கட்டத் தவறிய சச்சின்,பால்தாக்கரே!!!!...

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும், இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், கடந்த வருடம் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக உள்ள அவர், மும்பை மாநகராட்சிக்கு தண்ணீர் வரி கட்டத் தவறியுள்ளதாக அவரது பெயர் மும்பை மாநகராட்சி வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், சச்சின் பெயர் மட்டுமல்லாமல் சிவசேனை கட்சித் தலைவர் பால்தாக்கரே பெயரும் இடம்பெற்றுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு தண்ணீர் வரியை இதுவரை 2 லட்சம் பேர் கட்டவில்லை, வசூலாக வேண்டிய தொகை ரூ.1000 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்டாவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்ததாகவும், இதனால் தகவல் ஆணையரின் உத்தரவின்பேரில் தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை மாநகராட்சி தனது வலைத்தளத்தில் கடந்த 16-ம் தேதி பதிவேற்றம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home