சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க...
சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட
பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான
பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி .ராமசாமி தேசாய் பதில்
அளிக்கிறார்.
''பட்டப் படிப்பு படித்திருக்கும் நான், எங்கள் ஊரில் நடந்த ஒரு மாத 'தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி' (EDP - Entrepreneurship Development Programme) பெற்றுள்ளேன். அதை முடித்து, தொழில் துவங்குவது பற்றி பயிற்சி கொடுத்தவர்களிடம் கேட்டால், 'பயிற்சி மட்டும்தான் தருவோம். தொழிலை நீங்களாகத்தான் துவங்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள். தொழில் துவங்க, யாரை அணுக வேண்டும்..?'' - என்.பத்மா, திண்டிவனம்
''கவலையே வேண்டாம்... தொழில் துவங்குபவர்களுக்கு என்றே மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்கி உதவி செய்கின்றன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால், உங்களுக்கான வழி தெரிந்துவிடும். அரசு திட்டங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP).
புதிய தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் மேம்பாட்டு திட்டம் (NEEDS -New Entrepreneur cum Enterprise Development Scheme).
உணவுப் பதப்படுத்தும் புதிய தொழில்களுக்கு மானிய உதவித் திட்டம்.
பொது கடன் வசதி பெறும் குறு, சிறு மற்றும் மத்திய தொழில் துவங்க கடன் வசதி, அதற்கான மானியம்.
பெண் தொழில்முனைவோருக்கு 5% கூடுதல் மானியம் தரும் திட்டம்.
10 லட்சம் வரை சொத்து பிணை யம் இல்லாமல் கடன் வசதி.
100 லட்சம் வரை தகுதியான தொழில்களுக்கு சொத்து பிணை யம் இல்லாமல் கடன் வசதி.3 வருடம் மின்சார மானியம்... அத் துடன் நீங்கள் கட்டும் வாட் வரி அனைத்தையும் ஆறு வருடங்களுக்கு அல்லது உங்கள் இயந் திரத்தின் மதிப்பு வரை திரும்பப் பெறலாம்...
என பலதரப்பட்ட மானி யங்கள், சலுகைகள். பெண் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை இருக்கின்றன.
இந்த மானியம் மற்றும் சலுகைகளைப் பெறவும், மேற்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் அரசாங்கமே உதவிகள் செய் கின்றது. இத்தகைய உதவி யைப் பெறுவதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உற்பத்தி/சேவை (சர்வீஸ்) இவற்றில் சரியான தொழிலைத் தேர்ந்தெடுத்து, வங்கிகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்தல்.
தனி நபர்/பங்குதாரர்/குழு பங்கு கம்பெனிகள் /பொது பங்கு கம்பெனிகள்/சங்கங்கள்/ சுயஉதவிக் குழுக்கள்... இவற்றில் ஒரு தொழில் அமைப்பைத் தேர்ந்தெடுத்தல்.
வங்கிக் கடன்/மூலதன மானியச் சலுகைகள்/மானியத் திட்டத்துடன் கடன் என உங்கள் தொழிலுக்கான சலுகையைப் பெறுதல்.
உற்பத்தி மற்றும் சேவை செய்ய உகந்த இடம், கட்டட அமைப்பு ஏற்பாடு செய்தல்.
தேவையான தொழில்நுட்பம், அதற்கான நவீன இயந்திரங்கள், அவற்றை நிறுவுதல் என அலுவலகத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
நடைமுறை மூலதனத்தை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலமாகப் பெறுதல்.
தேவைக்கேற்ப தொழிலுக்கான இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அமைத்து, ஆறு மாதம் அவற்றை சிறப்பாகக் கண் காணித்தல்.இவை உட்பட மொத்தம் 14 விஷயங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் உங்களுக்கு வழி காட்டுவதற்காகவே 'ஆர்.ஜி.யு.எம்.ஒய்' எனப்படும், 'ராஜீவ் காந்தி தொழில் முனைவோர் நண்பன் திட்டம்' (RGUMY-Rajiv Gandhi Udyami Mitra Yojana) ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் பயிற்சி பெற்ற அனைவரும் இந்த 'நண்பன்' திட்டத்தில் பதிவு செய்யலாம். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு பதிவுக் கட்டணம் கிடையாது.
நாடு முழுவதும் 'தொழில்முனைவோரின் நண்பன்' (மித்ரா) என்ற பெயரில், மத்திய அரசின் அனுமதி யோடு இதற்காகவே சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, மேற்கண்ட 14 உதவிகளையும் 'நண்பன்’ திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் உங்களுக்குச் செய்து தரும். இதற்கென இருக்கும் விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்.
'நண்பன்’ நிறுவனம் எந்த ஊரில் இருந்தாலும், இந்தியாவில் எந்த இடத்திலும் உள்ள தொழில்முனை வோருக்கு உதவி செய்யலாம். இந்த உதவிகள் அனைத்தையும் மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. (MSME) நிறுவனத்தின் இணையதளத்தில் அவ்வப் போது 'நண்பன்’ நிறுவனங்கள் பதிவு செய்யும். 'நண்பன்’ பற்றிய கூடுதல் விவரங்களை அறிய, rgumy.nic.in இணையதளத்தை நாடலாம்.
உங்கள் தேவைக்கு
திருச்சியில் உள்ள பாரதி தாசன் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மற்றும்
சுயதொழில் மேம்பாட்டு நிறுவனத்தையும் (IECD) அணுகலாம்.''-அஷ்ரப்''பட்டப் படிப்பு படித்திருக்கும் நான், எங்கள் ஊரில் நடந்த ஒரு மாத 'தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி' (EDP - Entrepreneurship Development Programme) பெற்றுள்ளேன். அதை முடித்து, தொழில் துவங்குவது பற்றி பயிற்சி கொடுத்தவர்களிடம் கேட்டால், 'பயிற்சி மட்டும்தான் தருவோம். தொழிலை நீங்களாகத்தான் துவங்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள். தொழில் துவங்க, யாரை அணுக வேண்டும்..?'' - என்.பத்மா, திண்டிவனம்
''கவலையே வேண்டாம்... தொழில் துவங்குபவர்களுக்கு என்றே மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்கி உதவி செய்கின்றன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால், உங்களுக்கான வழி தெரிந்துவிடும். அரசு திட்டங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP).
புதிய தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் மேம்பாட்டு திட்டம் (NEEDS -New Entrepreneur cum Enterprise Development Scheme).
உணவுப் பதப்படுத்தும் புதிய தொழில்களுக்கு மானிய உதவித் திட்டம்.
பொது கடன் வசதி பெறும் குறு, சிறு மற்றும் மத்திய தொழில் துவங்க கடன் வசதி, அதற்கான மானியம்.
பெண் தொழில்முனைவோருக்கு 5% கூடுதல் மானியம் தரும் திட்டம்.
10 லட்சம் வரை சொத்து பிணை யம் இல்லாமல் கடன் வசதி.
100 லட்சம் வரை தகுதியான தொழில்களுக்கு சொத்து பிணை யம் இல்லாமல் கடன் வசதி.3 வருடம் மின்சார மானியம்... அத் துடன் நீங்கள் கட்டும் வாட் வரி அனைத்தையும் ஆறு வருடங்களுக்கு அல்லது உங்கள் இயந் திரத்தின் மதிப்பு வரை திரும்பப் பெறலாம்...
என பலதரப்பட்ட மானி யங்கள், சலுகைகள். பெண் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை இருக்கின்றன.
இந்த மானியம் மற்றும் சலுகைகளைப் பெறவும், மேற்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் அரசாங்கமே உதவிகள் செய் கின்றது. இத்தகைய உதவி யைப் பெறுவதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உற்பத்தி/சேவை (சர்வீஸ்) இவற்றில் சரியான தொழிலைத் தேர்ந்தெடுத்து, வங்கிகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்தல்.
தனி நபர்/பங்குதாரர்/குழு பங்கு கம்பெனிகள் /பொது பங்கு கம்பெனிகள்/சங்கங்கள்/ சுயஉதவிக் குழுக்கள்... இவற்றில் ஒரு தொழில் அமைப்பைத் தேர்ந்தெடுத்தல்.
வங்கிக் கடன்/மூலதன மானியச் சலுகைகள்/மானியத் திட்டத்துடன் கடன் என உங்கள் தொழிலுக்கான சலுகையைப் பெறுதல்.
உற்பத்தி மற்றும் சேவை செய்ய உகந்த இடம், கட்டட அமைப்பு ஏற்பாடு செய்தல்.
தேவையான தொழில்நுட்பம், அதற்கான நவீன இயந்திரங்கள், அவற்றை நிறுவுதல் என அலுவலகத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
நடைமுறை மூலதனத்தை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலமாகப் பெறுதல்.
தேவைக்கேற்ப தொழிலுக்கான இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அமைத்து, ஆறு மாதம் அவற்றை சிறப்பாகக் கண் காணித்தல்.இவை உட்பட மொத்தம் 14 விஷயங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் உங்களுக்கு வழி காட்டுவதற்காகவே 'ஆர்.ஜி.யு.எம்.ஒய்' எனப்படும், 'ராஜீவ் காந்தி தொழில் முனைவோர் நண்பன் திட்டம்' (RGUMY-Rajiv Gandhi Udyami Mitra Yojana) ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் பயிற்சி பெற்ற அனைவரும் இந்த 'நண்பன்' திட்டத்தில் பதிவு செய்யலாம். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு பதிவுக் கட்டணம் கிடையாது.
நாடு முழுவதும் 'தொழில்முனைவோரின் நண்பன்' (மித்ரா) என்ற பெயரில், மத்திய அரசின் அனுமதி யோடு இதற்காகவே சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, மேற்கண்ட 14 உதவிகளையும் 'நண்பன்’ திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் உங்களுக்குச் செய்து தரும். இதற்கென இருக்கும் விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்.
'நண்பன்’ நிறுவனம் எந்த ஊரில் இருந்தாலும், இந்தியாவில் எந்த இடத்திலும் உள்ள தொழில்முனை வோருக்கு உதவி செய்யலாம். இந்த உதவிகள் அனைத்தையும் மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. (MSME) நிறுவனத்தின் இணையதளத்தில் அவ்வப் போது 'நண்பன்’ நிறுவனங்கள் பதிவு செய்யும். 'நண்பன்’ பற்றிய கூடுதல் விவரங்களை அறிய, rgumy.nic.in இணையதளத்தை நாடலாம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home