உங்களது மொபைல் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா?
இன்றைய
கால கட்டத்தில் நம் மொபைல் மற்றும் கம்பியூட்டர் பாஸ்வேர்ட்களை மற்றவர்கள்
அனுமானிக்க இயலாதபடி வைத்துக் கொண்டால் மட்டுமே அது பாதுகாப்பானதாக இருக்க
முடியும்.
நம்
பெயர், குழந்தை
மற்றும் மனைவி பெயர் ஆகிய வற்றிலும், பிறந்த நாள், மண நாள் ஆகிய வற்றை இணைத்தும் இருந்தால், நம்மிட
மிருந்து பெர்சனல் தகவல்களை வாங்கி, பாஸ்வேர்டைக்
கண்டுபிடித்துவிடுவார்கள்.
இந்த
வழியில் இயங்கி, பெர்சனல்
தகவல்களைத் திருடும் கூட்டம், இணையத்தில் நிறைய உள்ளது.
ஒரு
சிலர் பாஸ்வேர்டாக "password" என்பதையே வைத்துக் கொள்வார்கள். இதுவும் தவறானதே. ஒரு சில எழுத்துக்களைக்
கண்டறிந்தால், இதனை உறுதி செய்வது எளிதாகிவிடும்.
SplashData என்னும் நிறுவனம், உலக அளவில் மிக அதிகமாகப்
பயன்படுத்தும் பாஸ்வேர்ட் குறித்து ஆய்வு செய்கையில் "password" என்பதே இதுவரை முதலிடம் பெற்றதாக அறிந்தது.
ஆனால், தற்போது ""123456''
என்ற பாஸ்வேர்ட் தான் மிக அதிகமாகப் பயன் படுத்தப்படும்
பாஸ்வேர்ட்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் "password"
உள்ளது.
அடுத்த
மூன்றாவது இடத்தில் எது உள்ளது தெரியுமா? "12345678," என்பதுதான். இது 2012 ஆம் ஆண்டில் இருந்து இதே இடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில்,
"qwerty" மற்றும் "abc123" ஆகியவை உள்ளன.
அடோப்
சாப்ட்வேர் தொகுப்புகள் பயன்படுத்தும் பலர், 'adobe123' மற்றும் 'photoshop' ஆகியவற்றையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுவும் தெரிய
வந்துள்ளது.
இது
போல பாஸ்வேர்ட்களைப் பயன் படுத்துவது மிகவும் ஆபத்தானது. ஆனால், பாஸ்வேர்ட்களை மனதில் இருத்திக்
கொள்வது, நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினமாக உள்ளது
என எண்ணுகிறீர்களா?
அதுதான்
இல்லை எளிதில் நினைவில் இருக்கும் வகையிலும் பாஸ்வேர்ட்களை உருவாக்கலாம். கீழே சில
எடுத்துக் காட்டுகள் தரப்பட்டுள்ளன.
you_are-super/ you1are2super
இதே போல நீங்களும் உருவாக்கிப் பயன்படுத்திப் பாருங்களேன்.அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home