ஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்
ஐஓஎஸ்-க்கு
போட்டியாக மொபைல் போன்களுக்காக பிரத்தியோகமாக 2003ல் உருவாக்கப்பட்டதே ஆன்ட்ராய்டு இயங்குதளம். முதன்முதலில் Android,
Inc என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, பின்னர்
கூகுள் நிறுவனத்தால் 2005ல் விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் ஒஹெச்எ (OHA - Open Handset
Alliance) என்ற நிறுவனத்தில் பதிவு செயததன் மூலம் ஓபன்சோர்ஸ்
அந்தஸ்து பெற்றது.
ஆன்ட்ராய்டு
இயங்குதளம் முழுவதும் சி, சி++ மற்றும் ஜாவா கோடிங்களைக் கொண்டே
உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு
அப்ளிகேசன்கள் சான்ட்பாக்ஸ் எனும் தொழில்நுட்பத்தில் செயல்படுவதால் மிகவும்
பாதுகாப்பானது. மற்றும் இந்த வகை அப்ளிகேசன்களில் ப்ரைவசியும் அதிகம்.
கூகுள்
தயாரிப்புகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும்
மொபைல் போன்கள் ஐபோன்களுக்கு மாற்றாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகவும்
பிரபலமடைந்துள்ளது.
முதலில்
ஆன்ட்ராய்டு இயங்குதளமானது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்காக மட்டுமே
வடிவமைக்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலங்களில் இது, லேப்டாப்கள்,
நெட்புக்கள் (Netbooks), ஸ்மார்ட்புக்ஸ் (Smartbooks)
மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் வெர்சன்கள்:
·
முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளம்
செப்டம்பர் 2008ல் வெளியிடப்பட்டது.
·
கப்கேக் (v1.5),
·
டூனுட் (v1.6),
·
எக்லைர் (v2.0)
2009ல் வெளியிடப்பட்டது.
·
ப்ரோயோ (v.2.3),
·
ஜிங்கர்பிரட் (v2.4)
2010ல் வெளிவந்தது.
·
ஹனிகாம்ப் (v3.0)
2011 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.
·
ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச் - ஆனது
அக்டோபர் 2011ல் வெளிவந்தது.
·
ஜெல்லிபீன் (V4.1.x) ஜூலை 9, 2012லும்,
·
ஜெல்லிபீன் (V4.2) நவம்பர் 13, 2012லும் வெளியிடப்பட்டது.
என்னதான்
ஆன்ட்ராய்டு இயங்குதளம் உலகப்புகழ் பெற்றதாக இருந்தாலும், அப்ளிகேசன் டெவலாபின்பொழுது டிவைஸ் பிராக்மென்டேசன்(Device
Fragmentation) என்ற எரர் பிரச்சனை இருப்பதை யாராலும்
மறுக்கமுடியாது.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home