17 May 2014

நீங்கள் தான்... நாளைய வி.ஏ.ஓ. இதோ சில டிப்ஸ்...

மத்திய மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் அறிவிக்கும் 3,000 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். இத்தகைய போட்டிகள் மிகுந்துள்ள இச்சூழ்நிலையில் வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களது தகுதியையும், திறமையையும் வளர்த்துக் கொள்வது எப்படி? போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணியை அடைவது எப்படி? விரைவில் நடைபெறவுள்ள வி.ஏ.ஓ மற்றும் குரூப் 2 தேர்வுகளில் உறுதியான வெற்றியை எளிமையாக அடைவது எப்படி? என்பது குறித்த பல்வேறு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்... சென்னை, குரோம்பேட்டையில் இயங்கிவரும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமியின் இயக்குனர் ச.வீரபாபு.... தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் பொதுத்தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழ்ப்பாடத்தைப் பொறுத்தமட்டில் சமச்சீர் பாடப்புத்தகங்கள், பொதுத்தமிழ் மற்றும் சிறப்புத்தமிழ் போன்ற புத்தகங்களை முழுமையாகவும், தெளிவாகவும் செறிவாகவும் தனிக்கவனம் செலுத்தியும் படித்தால் பொதுத்தமிழ் பகுதியில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற முடியும். தமிழ் தானே... அதை கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் எனக்கருதி தமிழை தள்ளிப்போட்டு, அதனால் உங்கள் வெற்றியையும் தள்ளிப் போட்டு, தடுமாறி தடம் மாறாமல் பொதுத்தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே படிக்கத் துவங்குங்கள். தேர்விலே வெற்றிபெற கடினமாகப் படித்தால் மட்டும் போதாது. வினா வங்கியை வைத்து பயிற்சி செய்யவேண்டும். படிப்பது மற்றும் படித்ததை பயிற்சி செய்து பார்ப்பதைவிட மிக முக்கியமானது மாணவர்களின் மனநிலையே. குறிப்பாக தேர்வு அறையில் அவசரப்படாமலும் பதற்றமடையாமலும் இருப்பது நல்லது. மாறாக, பதற்றமடைவதால் தெரிந்த வினாக்களுக்கே தவறான விடையளிக்க வேண்டிய சூழலும் கொள்குறி வகை விடையை சரியாக கருமையாக்க முடியாத நிலையும் ஏற்படலாம். அவ்வாறு அரசுத்தேர்வை அவசர கோலத்தில் அணுகாமல் மனதை மகிழ்சியாகவும் அமைதியாகவும் வைத்திருந்தால் தெரியாத வினாக்களுக்குக்கூட நான்கு விடைகளில் தவறான மூன்று விடைகளை கண்டுபிடித்து அதை நீக்குவதன் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கலாம். 14.06.2014 அன்று வி.ஏ.ஓ. தேர்வெழுதும் மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டும் வகையில் 2 மாதிரி வினாத்தாள்களை இலவசமாக வழங்க உள்ளோம். இந்த வினாத்தாள்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள புதிய பாடத்திட்டத்தின்படியும், சமச்சீர் கல்வி மற்றும் கிராம நிர்வாகம், புத்திக்கூர்மைத்திறன், பொது அறிவு, பொதுத்தமிழ் போன்ற பாடங்களுக்கு முக்கியக் கவனம் செலுத்தியும் எதிர்நோக்கும் வினாக்களை உள்ளடக்கியும் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் அரசுத்தேர்வு நடைமுறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள “வி.ஏ.ஓ. மாதிரி வினாத்தாள்களை” பெற விரும்புவோர் 9710375604 / 9941937976 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமியின் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகவே நன்கு திட்டமிட்டு நம்பிக்கையோடு படியுங்கள்... நீங்கள்தான் நாளைய வி.ஏ.ஓ! இவ்வாறு தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ச.வீரபாபு தற்போது, “பொதுத்தமிழ் வெற்றிக்களஞ்சியம்” எனும் தலைப்பில் எல்லாத்தேர்வுகளையும் வெல்ல வைக்கும் ஒற்றைப் புத்தகமாக பொதுத்தமிழ் பாடத்திற்கான முழுமையான தொகுப்பு ஒன்றைத் தயாரித்துள்ளார். 30 நாளில் பயிற்சிஎங்கள் அகடமி சார்பில் மாறுபட்ட ஒரு முயற்சியாக 30 நாட்களிலேயே விஏஓ தேர்வுக்கான பயிற்சி அளிக்கக்கூடிய வகுப்பை மே 10ம் தேதி முதல் தொடங்கி உள்ளோம். தேர்வுக்காக இப்போது படிக்க தொடங்கியவர்கள் கூட இதில் சேர்ந்தால் முழுமையாக கற்று தேர்வுக்கு தயாராகலாம். பயிற்சியில் தினமும் தேர்வுகளும் நடத்தப்படும் என்று கூறினார் வீரபாபு.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home