நம்பினால் நம்புங்கள்
* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும்.
* சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது.
* நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
* உலகில் உள்ள 5 நீரிழிவுக்காரர்களில் ஒருவர் இந்தியர்!
* ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.
* திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும்.
* கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு!
* ஒரு கிலோ எடை அதிகரிக்க 7 ஆயிரம் கலோரி உணவு தேவை. ஒரே நாளில் கூட இந்த அளவு சாப்பிட்டுவிட முடியும். ஆனால், இதே அளவு கலோரியைக் குறைக்க வேண்டுமானால் 17.5 மணி நேரம் நீச்சல் அல்லது 35 மணி நேரம் நடை அல்லது 7 மணி நேரம் ஓட்டம் தேவை!
* 126936598-நம்மில் பலர் இந்த வாக்கியத்தின் முதலில் உள்ள எண்களை முழுமையாகப் படிக்காமல் மற்ற வார்த்தைகளையே படிப்போம்!
* சில பனிச்சறுக்கு வீரர்கள் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுண்டு.
* ஒரே ஒரு ‘டீ பேக்’ விலை 12 ஆயிரம் அமெரிக்க டாலராம்... இதைத் தயாரித்த பிரிட்டிஷ் ஜுவல்லரி 280 வைரங்களால் அதை அலங்கரித்ததே இந்த விலைக்குக் காரணம்!
* நாம் சுமார் 10 ட்ரில்லியன் செல்களால் உருவாகியிருக்கிறோம்.
* ஒரு அமெரிக்கர் 30 நிமிடங்களில் 427 ஆம்லெட்கள் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். நம்ம ஊர் ரோட்டோர புரோட்டா கடைகளில் சாதனை வேகம் எவ்வளவு?
* சராசரி குழந்தை வளரும் அதே வேகத்தில் தொடர்ந்து ஒருவர் வளர்ந்துகொண்டே இருந்தால், 10 வயதில் 1,87,469 கிலோ எடையை எட்டி விடுவார். நல்லவேளை!
* 2004ம் ஆண்டு வரை, சிங்கப்பூரில் ‘சூயிங் கம்’ தடை செய்யப்பட்டிருந்தது.
* பனிச்சிறுத்தைகளால் கர்ஜனை செய்யவோ, பேரொலி எழுப்பவோ முடியாது.
* வட அமெரிக்காவின் மிக வெப்பமான பகுதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. அவ்விடத்துக்கு மரணப் பள்ளத்தாக்கு எனும் பொருள்படும் ‘டெத் வேலி’ என்ற பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
* பெண் தேனீக்கள் மட்டுமே கொட்டும்.
* சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் கண்கள் அதன் இறக்கைகளில் உள்ளன.
* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.
* சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்!
* ஒரே இரவில் வௌவால் 3 ஆயிரம் பூச்சிகளைக்கூட தின்னும்.
* இங்கிலாந்திலுள்ள ஒரு நூலகத்தில் 288 ஆண்டுகள் கழித்து, அபராதம் செலுத்தி, ஒரு புத்தகம் திருப்பியளிக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவானது.
* ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் இடம்பெறும் ‘யோடா’ கதாபாத்திரம், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
* பிரமிடு போன்ற வடிவத்தில் கூட, ஜப்பானில் தர்ப்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
* தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் அதிகாரபூர்வமான பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் 167 எழுத்துகள் வரும்!
* நியூயார்க் நகரத்திலுள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டுமானத்தில் 1 கோடி செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* செவ்வாய்க் கிரகத்திலுள்ள மிகப்பெரிய எரிமலை 27 கிலோமீட்டர் உயரமானது. 84 ஈஃபிள் கோபுரங்களை ஒன்றன் மீது ஒன்றென அடுக்கி வைத்தது போல அத்தனை உயரம்!
* பீ நட் பட்டர் என்ற சாண்ட்விச் வெண்ணெயை வைரமாக மாற்றி விட முடியும் - வேதிச்சமன்பாட்டின் அடிப்படையில்!
* ஜி.ஐ.ஜோ பொம்மையின் புரோட்டோடைப் 2 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்பனை ஆகியிருக்கிறது.
* பனிக்கட்டியில் ஏறக் குறைய 90 சதவீதம் காற்றுதான்!
* விண்வெளியில் உண்ணப்பட்ட முதல் உணவு ஆப்பிள் சாஸ். அமெரிக்க விண்வெளியாளர் ஒருவர் அதை காலி செய்தார்!
* பபுள் கம் 1906ல் அறிமுகமானது. அப்போது அதன் பெயர் பிளிப்பர் பிளப்பர்!
* அந்துப்பூச்சிகளால் ஒன்றையொன்று பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் மோப்பம் பிடித்து அறிய முடியும்!
* சூரியனுக்கு உள்ளே 10 லட்சம் பூமிகளைக்கூட நிரப்பிவிட முடியும்!
* அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள ஒரு ஓட்டலின் பிரகாசமான விளக்கின் ஒளியை, 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விமானத்திலிருந்தும் காண முடியும்!
* பெரிய மலைப் பாம்பு முழுதாக ஒரு ஆட்டையே விழுங்கி விடும்.
* அலிகேட்டர் முதலைகளால் 80 ஆண்டுகள் வாழ முடியும்.
* சில நத்தைகள் 3 ஆண்டுகள் தாண்டியும் உறங்கிக்கொண்டே இருக்கும்.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home