5 May 2014

அஜ்மீர் க்வாஜா கரிப் நவாஜ்



அஜ்மீர் க்வாஜா கரிப் நவாஜ் அவர்களின் ஆன்மீக வாசலிலே இரண்டு கண்களையும் இழந்த எளியவர் ஒருவர் நின்று கண்ணுக்கொடுங்க கரிப்நவாஜ் கண்ணுக்கொடுங்க கரிப்நவாஜ் என்று அழுதுப்புலம்பி கண்ணீர் சிந்திய வண்ணம் காலம் கழித்து வந்தார்.அங்கே வருபவர்கள் வழங்கும் வருமானத்தின் மூலம் அவரது ஜீவியம் நடந்துக்கொண்டிருந்தது..எல்லோரும் அவரைப்பார்த்து இரக்கமும் அனுதாபமும் கொள்வர்..இதுவே அவரது அன்றாட வாழ்க்கை ஆகிவிட்டது ..
மன்னர் ஒளரங்கசேப்((ரஹ்))அவர்கள் இந்த ஆன்மீக ஜோதி இடத்தில் அளவற்ற ஈடுபாடு கொண்டவர்..மன்னர் அவர்கள் க்வாஜாகரிப்நவாஜ் அவர்களை ஜியாரத் செய்ய அடிக்கடி வருவார்கள் ,,அவர்கள் வரும்போது எல்லாம் அந்த கண் இழந்தவரின் புலம்பலைக் கேட்டு அவரைக் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு செல்வார்கள் ,,இந்தப்படி அன்று ஒருநாள் மன்னர் ஜியாரத்து வரும்போது இவரது புலம்பல் சத்தம் அதிகமாக மன்னர் காதில் விழுகிறது..மன்னர் தன் உதவியாளர்களை நகரச் சொல்லிவிட்டு நேராக அந்தக் குருடர் அருகில் சென்று
மன்னர்::உமக்கு என்னய்யா குறை என்ன வேண்டும் ?
குருடர்::எனக்கு கண்கள் வேண்டும் அதை ஹாஜா பாவா தரவேண்டும்
மன்னர் ::நீ கேட்டால் இவர் உனக்கு கண்ணை தந்து விடுவாரா?
:குருடர்::நிச்சயமா தருவார்
மன்னர் ::எவ்வளவு காலமா இப்படி நின்று இங்கே புலம்புகிறீர்
குருடர்::நாற்பது ஆண்டுகளாக
மன்னர் ::நாற்பது ஆண்டுகாக கேட்டும் உமக்கு இவர் கண்களை வழங்கவில்லையே??
குருடர்::கொடுக்கும் வரை நான் கேட்டுக் கொண்டேயிருப்பேன்
மன்னர் ::ஓ அப்படியா நான் யார் என தெரியுமா ??
குருடர்:தெரியவில்லை
மன்னர் ::நான்தான் ஒளரங்கசேப் மன்னர்
குருடர்::ஒரு மன்னரா இவ்வளவு நேரம் என்னை விசாரித்து.ரொம்ப சந்தோஷம்.நீங்களும் எனக்காக கேளுங்கள்
மன்னர் ::இவ்வளவு காலம் கடத்தி விட்டீர் நாளை நான் இங்கே மீண்டும் வருவேன் .அப்படி நான் வரும்போது உமக்கு கண் பார்வைக் கிடைத்திருக்க வேண்டும் ..இல்லையேல் உமது தலை துண்டிக்கப்படும் என்று எச்சரித்து விட்டு மன்னர் உள்ளே சென்று விடுகிறார்..அவ்வளவுதான் குருடர் கதிக்கலங்கி தலைப்போய் விடுமே என்ற பயத்தில் தரையில் விழுந்து உருண்டுப் புரள்கிறார்..மன்னர் திரும்பி போகும்போது இவரது நிலையைப் பார்த்து கொண்டே செல்கிறார் ,,அப்போதிலிருந்து குருடரின் செயல்பாடுகள் அதிகமாகி சத்தமும் கெஞ்சும் குரலுடன் க்ரிப் நவாஜ் அவர்களின் இதயக்கதவைத் தட்டுகின்றன..அடுத்தநாளும் வந்துவிட்டது ,,
மன்னர் வருகிறார் அந்தக் குருடர் இருந்த இடத்தை நோக்குகிறார்..என்ன ஆச்சரியம் என்ன அற்புதம்..அவருக்கு கண்பார்வைக் கிடைத்து விட்டது ,,மன்னர் அவர் அருகில் செல்கிறார் ,,
மன்னர்::என்ன பார்வை கிடைத்து விட்டதா???அவருக்கு கேட்பது மன்னர் என தெரியாது
அவர்::கிடைத்து விட்டது ,,இந்த க்வாஜா கரிப் நவாஜ் அற்புதத்தால் கண்ணுக்கு ஒளி கிடைத்தது ,,நேற்று மன்னர் எனது தலையை சீவி விடுவேன் என எச்சரித்து சென்றார்,,அதனால் நான் மிகவும் பயந்து போய் உருகி உருகி கேட்டேன் ,,எனது கோரிக்கை நிறைவேறியது..
மன்னர் ::எச்சரித்தது நான்தான்.நீ இத்தனை காலமாக வாயளவில் தான் கண்பார்வை வேண்டி நின்றீர்..தலையை எடுத்து விடுவேன் என எச்சரித்தப்பிறகுதான் உயிருக்கு பயந்து உள்ளத்தால் கேட்பீர் என எனக்கு தெரியும்,,உயிர்போய் விடுமே என்ற அச்சம் உமது உள்ளத்தில் பெருகியதால் உள்ளம் உருகி உண்மையான ஈடுபாட்டுடன் நீ கேட்டதால் உனக்கு கண்பார்வை கிடைத்தது..இறைவனிடத்திலும் இறைநேசர்களிடத்தும் உள்ளத்தை தூய்மையாக்கி உண்மையான ஈடுபாட்டுடன் கோரிக்கை விடுத்தால் நிச்சயமாக இறைவனின் அருளால் அவனது மாபெரும் கருணையால் மஹான்கள் மூலம் மகிமைகள் நிகழும் என்பதை உணர்த்தவே உனது தலையை துண்டிப்பேன் என சொல்லி அந்த எளியவருக்கு ஏராளமான அன்பளிப்புகள் வழங்கி அனுப்பி வைத்தார் ..இப்படியாக இறைநேசர்கள் நம் கண்முன்னே இக்காலத்திலும் நிகழ்த்தும் அற்புதஙகள் எத்தனையோ உள்ளன..அவற்றை இனி பதிவு செய்வோம்......
கவிஞர் நாகூர் காதர்ஒலி




********************************************************************
ஆன்மீக த்தின் அற்புதம் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் க்வாஜா கரீப் நவாஜ் அவர்கள் இப்போதைய சோவியத் ரஷ்யாவின் சமர்கந்த் என்ற ஊரில் பிறந்தார்கள் கொடும் வறுமையால் தன்ஜீவனதுக்கு தொட்டம்களில் நீர் இறைத்தார்கள் அவர்களது 12 வயதில் இப்ராஹிம் கண்தோசி என்ற ஞாநியை சந்திக்கிறார்கள் அந்த முதிய சூபிக்கு சாப்பிட பழங்கள் கொடுக்கிறார்கள் அந்த பழத்தை கொஞ்சம் சாப்பிட்ட சூபி மீதியை காஜா க்வஜா அவர்களிடம் கொடுத்து சாப்பிட பணிக்கிறார் அந்த எச்சில் பழம் சாப்பிட்டதில் இருந்து இவர்களின் மனம் உடல் சிந்தையில் பெரும் மாற்றம் .காண்கிறார்கள் பின் மக்கா மதீனா பயணம் மதீனாவில் ரசூலுல்லாஹ் கனவில் தோன்றி இந்தியா போய் இஸ்லாத்தை பரப்ப ஆணையிடுகிறார்கள் அதுதான் அதாயெ ரசூல் ரசூலின் உத்திரவு பெற்றவர் என்ற பெயர் அந்த காலகட்டத்தில் இந்தியா என்பதோ அது உலகின் எந்த பகுதி என்றோ அவர்கள் அறிந்திருக்கவில்லை இருந்தாலும் இரசூளின் உத்தரவன்றோ பயணத்தை தொடர்கிறார்கள் பகுதாது வருகிறார்கள் முஹய்யதீன் ஆண்டகையை சந்திக்கிறார்கள் பின் இந்தியா வந்து ஆன்மீக ஒளி ஏற்றுகிறார்கள் அவர்களது காலத்தில் 90 லட்சம் பேர் புனித இஸ்லாத்தில் இணைகிறார்கள் அதனால் குத்புல் ஹிந்த் என்று அழைக்க படுகிறார்கள் ஒருமுறை மன்னர் அவரங்க சீப் காலத்தில் தர்காக்கள் அதிகமாகி போலிகளும் கலந்தது அப்போது மன்னர் ஓர் அறிவிப்பு செய்தார் நான் ஒவொரு தர்காவிலும் போய் சலாம் சொல்வேன் அங்கிருத்து எனக்கு பதில் வரணும் இல்லையேல் அந்த தர்கா இடிக்க படும் என்று பல ஆயிரக்கணக்கான தர்காக்கள் இடிக்கப்பட்டது அஜ்மீர் வந்தார் மன்னர் 3 நாள்வரை பதில் இல்லை இருந்தாலும் போருமைகாத்தார் மன்னர் 3 வது நாள் பதில் வந்தது அவர் தங்கிய இடம் அவ்ரங்கசீப் மஸ்ஜித் என்று இப்போதும் உள்ளது இப்படி லட்சகணக்கான அற்புதங்களின் அரசர் காஜா பாவா அவர்களின் நினைவுநாள் ரஜப் பிறை 6 இதயெல்லாம் மறுப்பவர் கேலியும் கிண்டலும் செய்பவர் அகமியம் அறியா மூடர்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home