வெயிலை தணிக்கும் குளிர்பானம்
நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பல வகையான உணவுகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. ஒருகாலத்தில் நம் முன்னோர்கள் உடல்சூட்டை தணிக்க நீர்மோர், கேழ்வரகுகூழ், போன்ற எளிய உணவுகளை சாப்பிட்டனர், இதனால மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை நிலையை அடைந்தனர். தற்போது, வெயில் காலம் தொடங்கிவிட்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகுகூழின் விற்பனை ஒருபுறம் அமோகமாக இருக்க, ஒருபக்கம் குளிர்பான வியாபாரமும் களைகட்டி வருகிறது.
உடலுக்கும், மனதுக்கும் சக்தி கொடுக்கும் ஒரு ஜிலீர் பானம் தற்போது விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. அதன் பெயர் ‘‘மோலாசம்’’, அது என்ன மோலாசம் என்ற கேள்வியோடு குளிர்பானக்கடையை நடத்திவரும் செல்வி என்பவரிடம் கேட்டோம், அது குறித்து ஆர்வத்தோடு அவர் கூறுகையில், வெள்ளை புட்டரிசி, பன்னீர், தேங்காய்பால், கல்யாண முருங்கை இலை, ஆகிய எளிய பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் மோலாசம்.
இதை தினமும் குடித்து வந்தால் உடல்சூடு முழுவதும் குணமடையும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், கண் எரிச்சல், அடிவயிற்று வலி, வயிற்றுபுண், உடல் சோர்வு, போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இந்த பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம். மேலும் வெயில் காலத்திற்கு மிகவும் சிறந்த குளிர்பானவகை என்றார்.
செய்முறை: வெள்ளை புட்டரிசி (அ) உயர்தர பச்சரிசியை, பயன்படுத்துவதற்கு முன்பாக ஒருநாள் முழுவதும் பன்னீரில் ஊறவைக்கவேண்டும், அதில் கல்யாண முருங்கை இலைகளின் நரம்புகளை நீக்கி வெறும் இலைகள் மட்டும் 2ல் இருந்து 5 இலைகள் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும், மறுநாள் காலையில் பயன்படுத்தலாம். இதனுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து தேங்காய்பால் ஊற்றி சாப்பிடலாம்.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home