14 June 2014

ஒரு செய்தி பல கோணம்





ஒபாமா ஒப்பாரி .....!

அமெரிக்க அடிமை இராக் அரசு வீழும் நிலையில் ....!!!

ஈராக்கில் தற்போது என்ன நடக்கிறது?

இன்னும் கொஞ்ச நாளில் பாக்தாத் ISIS (Islamic State of Iraq and Syria) படையனர் வசம் வீழ்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது ஆனால் தற்பொழுது ஷியா தரப்பினரும் சண்டைக்கு ஆள் சேர்த்து வருகிறார்களாம், அமெரிக்காவும் ஈராக் அரசாங்கத்திற்கு எவ்வகையில் உதவி செய்வது என்று ஆல்சோனைகள் நடத்தி வருகிறார்களாம்....

இந்நிலையில் பாக்தாதை பிடிக்கும் சண்டை பல நாட்கள் நீடிக்கும் போல தெரிகிறது... அப்படி நீடித்தால் உலக சந்தையில் கச்சா என்னை விலை உயரும் குறிப்பா அமெரிக்காவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

ஜூன் 10 அன்று ஈராக்கின் இரண்டாம் பெரிய நகரமான மொசுல்லை Mosul தாக்கி கையகப்படுத்திய பின்னேர் அதிவேகமாக பாக்தாதின் 140 கிலோமீட்டர் அல்லது ஒரு மணி நேர பயண தூர சுற்று வட்டாரத்தில் உள்ள Tikrit, samara மற்றும் அல் அண்பார் மாகாணத்தில் ஏனைய பல ஊர்கள் ஐஸில் படையினர் வசம் வீழ்ந்து விட்ட இவ்வேளையில் பாக்தாதின் பக்கம் அதிக வேகத்தில் விரைந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியாகிய வண்ணம் இருக்கிறது...

இன்னும் சில இடங்களில் இராணுவ வீரர்களை தத்தமது அணி பிரிவு தலைவர்களே சரணடைந்துவிடும் படியும் கட்டளையிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது...

இது ஈராக் இராணுவத்தில் பழுது அடைந்து பலகீனப்பட்டிருக்கும் மோசமான விநியோக தொடர்பை வெளிபடுத்துகிறது என்றும் விவரிக்கப் படுகிறது.

மோசல் நகரத்தில் உள்ள மத்திய வங்கியை தாக்கியதில் 429 மில்லியன் அமெரிக்க டாலரை தனது போருக்கு மூல தனமாக பெற்றுள்ளது ஐஸில் படை.... இது அவர்களுக்கு பெருமளவு ஆயுதத்தை விலைக்கு வாங்க உதவும் எனவும் இன்றைய காலகட்டத்தில் ஐஸில் போராளி குழுமம் தான் உலக பணக்கார குழுமமாக வர்ணிக்கவும் படுகிறது.

வங்கியில் இருந்து பெறப்பட்ட இது மட்டும் தான் அவர்களுக்கு மூலதனம் என்றில்லை.... அவர்களுக்கு இதுக்கு முன்னரும் மாதம எட்டு மில்லியன் டாலர் வரை வரி மற்றும் நன்கொடை மூலமாக வாசூல் ஆகி கொண்டுதான் இருக்கிறது...

அமெரிக்காவை சேர்ந்த பயங்கரவாத ஆய்வாளர் என்று அடையாளப் படுத்திக்கொள்ளும் பத்திரிக்கையாளர் ஐசிஸ்ஸை வெகு கட்டுக்கோப்பான ஒருங்கிணைந்த போராளி கட்டுமான குழுமம் என்று விவரித்து இருக்கிறார்..

சமீபத்தில் சிரியாவில் ஐஸிஸ் போராளிகள் தங்கி இருந்த ஒரு கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானதில் ஐஸிஸ் போராளி குழும காரியாலயத்தின் அன்றாட வரவு செலவு கணக்கு புத்தகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு அனைவரையும் மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

அவ்வளவு நேர்த்தியாக மக்கள் பணத்துக்கு கணக்கு வழக்கு கையாளப் படுகிறது என்றும் ஒரு கார்ப்புரேட் வணிக ஸ்தாபனம் போல தொடர்புகள் மற்றும் இதர அலுவல்கள் மேற்கொள்ள படுகிறது என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் பரவலாக தமது கட்டுரையில் குறிப்பிட்டும் வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க ஐஸில் அல்லது ஐஸிஸ் என்பவர்கள் யார் அவர்கள் எதை நோக்கி தமது முயற்ச்சியை அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அலசப்பட்டுவருகிறது...

ஐஸிஸ்ஸின் குறிக்கோள் படத்தில் உள்ளது போல சிரியாவில் உள்ள மத்திய, கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணத்தையும் ஈராக்கின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு இஸ்லாமிய இஸ்லாமிய கிலாபத்தை நிறுவ வேண்டும் என்பதாம்.

இதற்க்கு சவூதி மற்றும் ஏனைய அரபு நாட்டுக்காரர்கள் பெருமளவில் பண உதவி செய்து வருகிறார்களாம்.

இன்ஷா அல்லாஹ் சவுதியை போன்று வெறுமனே இஸ்லாத்தின் போர்வையில் வெறுமனே குடும்ப அரசாக இல்லாமல் ஒரு முழுமையான முறையான இஸ்லாம் போதிக்கும் மனித நேயமிக்க அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவிக்கும் இஸ்லாமிய அரசை நிறுவினால் யார் தான் வேண்டாம் என்போம் என்கிறார்களாம் ஈராக்கில் உள்ள மக்கள்.

கண்டிப்பாக பெரும் பெரும் வல்லரசு நாடுகள் போதிக்கும் ஆளும் அரசியல் வட்டாரத்தின் கடின கட்டுபாடுகள் நிறைந்த உளவு பார்த்து ஏற்றத்தாழ்வு பாராட்டி பகுத்து ஆளும் டேமொகரசி எனும் வெறும் பேரளவு ஜனநாயகம் வேண்டவே வேண்டாம் என்கிறார்களாம் அங்குள்ள சமூக ஆர்வலர்கள்.

இது ஒருபுறம் இருக்க மொசுலை தாக்கி வெற்றிகண்ட ஐஸில், அங்குள்ள துர்க்கி தூரகத்தையும் தாக்கி துர்க்கி நாட்டை சேர்ந்த 49 தூதரக ஊழியர்களையும் சிறை பிடித்து வைத்து இருப்பது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தையும் தலைவலியையும் ஐஸில் க்கு பெற்று தந்துள்ளது... துருக்கி அரசாங்கம் சென்ற சில வருட காலகட்டத்தில் சிரியாவில் போரிட்டு வரும் இதே ஐஸில் குழுமத்துக்கு மறைமுக உதவிகளை செய்து வந்தது என்பது குறிப்பிட தக்கது.

இதனால்

பெட்ரோல் டீசல் கட்டாயாம் உயரும் ...!!

பின்னர் குறையும் இன் ஷா அல்லாஹ் ..!!

செய்தி குறிப்பு தமிழாக்கம் : நாகூர் தீன்

******************

தீவிரவாதிகளிடம் இருந்து நகரங்களை மீட்க

ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்ப அதிபர் ஒபாமா தயக்கம்
*****************************
வாஷிங்டன்: அல்கய்தாவில் இருந்து பிரிந்த ஐஎஸ்ஐஎல் என்ற தீவிரவாத இயக்கம், சிரியாவில் இருந்து தங்களது போராட்டத்தை தற்போது ஈராக் நோக்கி திருப்பி உள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த தீவிரவாதிகள் ஈராக்கின் முக்கிய நகரங்களான மொசூல், திக்ரித் உள்ளிட்டவற்றை சன்னி பிரிவினரின் ஆதரவுடன் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஈராக் ராணுவ படைகள் தீவிரவாதிகளின் தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத் நகரத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். ஈராக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து பிரதமர் நூரி அல் மாலிக்கி, சமாரா நகரில் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் தீவிரவாதிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியை நாட ஈராக் முயன்று வருகிறது. ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்க தரப்பில் சுமார் 4500 வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் 2011ல் படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதனையடுத்து அங்கு ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு அனுபவம் காரணமாக ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்ப ஒபாமா தயக்கம் காட்டி வருகிறார். இதுகுறித்து ஒபாமா கூறுகையில், ‘ஈராக்குக்கு உதவ ராணுவ துருப்புகளை அனுப்பும் எண்ணம் கிடையாது.

வேறு விதமாக தொழில் நுட்ப ரீதியாக எவ்வாறு உதவுவது என்பது குறித்து தேசிய ஆலோசனை குழுவுடன் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படும்என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரானின் ஷியா பிரிவு தலைவர் அயதுல்லா அலி ஹூசைனி சன்னி பிரிவினருக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு ஷியா பிரிவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்இதனால் ஈராக்கில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

************************************************
· 
· 
Ifad Mohammed Musthafa Ansar ஈராக்கில் அரங்கேற்றப்படுவது ஒரு நாடகமே!

ஈராக்கிய நிகழ்வுகளின் உண்மையான பின்னணி இது தான்.
இன்று நடக்கின்ற சகல பிரச்சினைகளின் பின்னணியிலும் மேற்கு உட்பட வளைகுடா நாடுகளின் உளவுச் சேவைகளின் சதி இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற உண்மை.

ஆச்சரியம் என்ன தெறியுமா?

அது தான் சவூதி + ஈரான்+அமெரிக்க கூட்டணி.

ISIL
அல்லது ISIS என்ற பொது எதிரியை உருவாக்கி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தி இஸ்லாமியவாதிகள் அனைவரும் காட்டுமிராண்டிகள் தீவிரவாதிகள் என்ற இலட்சிணையக் குத்தி தீவிரவாத்துக்கேதிரான போராட்டத்தில் உலகம் கற்பனையும் செய்திராத ஒரு கூட்டணி உருவாகிக்கொண்டிருக்கிறது.

இதன் மூலம் சிரியாவிலும் எகிப்திலும், லிபியாவிலும் இடம்பெறும் உண்மையான எழுச்சிப் போராட்டங்களை மட்டந்தட்டுவது தான் இவர்களின் பொது இலக்கு. இவர்களின் பொது எதிரி இஸ்லாமிய இயக்கம்.

இந்தக் கூட்டணியை நியாயப்படுத்தத் தான் இந்த நாடகம் அரங்கேருகின்றது என்பதற்கு;

ஈரான் ஜனாதிபதியின் " தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்" என்ற கூற்றும்,

"
நாங்கள் எமது சிரியா நண்பர்களுக்கு எப்படி உதவி செய்கிறோமா அப்படியே ஈராக் சகோதரர்களுக்கும் உதவி செய்யத் தயார்." என்ற இராணுவ உயரதிகாரியின் கூற்றும் ஆதாராமாக இருக்கின்றன.

இதுவும் இன்னுமொரு சதுரங்க ஆட்டமே அல்லாமல் வேறில்லை.



-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home