8 June 2014

பட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்



முகநூலில்..
அண்ணன் மாதிரி பழகியவன் புகைப்படம் கேட்டான்...
தம்பி மாதிரி பழகியவன் புகைப்படம் கேட்டான்...
உயிராய் பழகியவன் புகைப்படம் கேட்டான்....
தோழி போட்டோ கேட்டாள்...
நம்பி கொடுத்திட்டேன்....

ஆனால்....
புகைப்படத்தை வாங்கிய பின்புதான்....
அண்ணன், தம்பி காமுகர்களாக மாறினார்கள்......
மிரட்டுகிறார்கள்......
தோழி, தோழனா மாறினான் ....!
அவனும் மிரட்டுகிறான்....
அவர்கள் இச்சைக்கு இரையாக வேண்டும்......
இல்லையென்றால்..
உன் புகைப்படம் முகநூல் முழுவதும் பரப்பப்படும்...
என்று மிரட்டுகிறார்கள்....என்று ....
பட்ட பின்பு புத்தி வந்து ..
புலம்பும்....
புத்திகெட்ட பெண்களே...!
உனக்கு அறிவு எங்க போய்விட்டது..?
முகநூலின் அபாயம் எத்தைகையது....
என்று "விழிப்புணர்வு"பதிவுகள் ..... பல பார்த்தும்....
நீ அலட்சியப் படுத்தியதின் விளைவு....
இன்று ..

உன் வாழ்க்கை சீரழிந்து இருப்பது...!
இந்த சீரழிவை நீயே தேடிக் கொண்டது..!
சொல்லி திருந்தாதவர்கள்..
பட்ட பின்பு தான் திருந்துவார்கள்...!
ஆனால் ...
அது எத்தகைய ஆபத்து மிக்கது என்பதை...
அப்போதுதான் உணர்வார்கள்..!
பட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்...
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home