முத்தான மூன்று விஷயங்கள்
வங்கிகளின் ஸ்டேட்டஸ்!
இந்தியாவில் சில வங்கிகளை நாம் ஆஹா.... ஓஹோ என்று தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம். ஆனால் உலக அளவில் நாம் கொண்டாடும் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை அறிந்தால் தலை சுற்றுகிறது. வெல்ஸ் ஃபார்கோ, சேஸ், ஹெச்.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி, சான்டன்டர் போன்ற வங்கிகள்தான் உலக அளவில் முன்னிலையில் உள்ள வங்கிகளாக கொண்டாடப்படுகின்றன. உலகின் மிக அதிக மதிப்புள்ள வங்கிகளுக்கான டாப் 10 பட்டியலில் இந்திய வங்கிகள் எதுவுமில்லை.
இந்த லிஸ்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி 38வது இடத்தில் இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி 99வது இடத்தை வகிக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி 126வது இடத்திலும், ஆக்சிஸ் வங்கி 175வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி 189வது இடத்தில் இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா 206வது இடத்தில் உள்ளது. சிறிய வங்கிகளை இணைத்து மிகப்பெரிய பிராண்ட் ஆக்குவதன் மூலம் சர்வதேசப் பட்டியலில் இந்திய வங்கிகள் இடம்பெறுவது சாத்தியமே!
இந்தியாவில் எத்தனை வர்த்தக வங்கிகள் இருக்கின்றன தெரியுமா? 26 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், 20 தனியார் வங்கிகளும், 43 வெளிநாட்டு வங்கிகளும், பிராந்திய ஊரக வங்கிகள் 64ம் ஊரக வங்கிகள் 4ம் இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1,606ம், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் 93,551ம் உள்ளன.
இது புதுசு
ஆக்ஸ்போர்ட் அகராதியில் அவ்வப்போது, புதிய வார்த்தைகளைச் சேர்ப்பது வழக்கம். இந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வார்த்தைகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது, ஆக்ஸ்போர்ட் அகராதி. இவற்றில் பல நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
MOOC - இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் இலவச கோர்ஸ்களை இப்படி அழைக்கிறார்கள்.
PEAR CIDER - பேரிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் மது பான வகை.
SELFIE - கேமரா செல்போனில் தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் போட்டோக்கள்.
STREET FOOD - தெருவோரங்களில் விற்கப்படும் உணவு வகைகள்.
BABY MOON - குழந்தை பிறப்புக்கு முன்பாக பெற்றோர் எடுக்கும் விடுமுறை.
BYOD (Bring your own device) - உங்களுடைய உபகரணத்தைக் கொண்டு வரவும்.
CLICK AND COLLECT- கடைகளில் தேவையான பொருட்களை முதலில் டிக் செய்து கொடுத்து, பிறகு பொருட்களைப் பெறுதல்.
FOOD BABY - வீங்கிய குடல்.
HACKERSPACE - கணினி தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பலரும் ஒருங்கிணையும் இடம்.
டாய்லெட் பேப்பர் தங்கத்தில்...
பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட பணக்காரர்களுக்காக, 22 காரட் தங்கத்தினால் ஆன விலையுயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம். ‘டாய்லெட் பேப்பர்மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்தப் புதிய தயாரிப்பினை 22 காரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் வேறு அளித்துள்ளது.
இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர். ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு ஷாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து டோர் டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. துபாயில் உள்ள நிறுவனம், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்கான இருக்கையை முழுக்க முழுக்க தங்கத்தினால் தயாரித்திருப்பதைப் பார்த்து, தங்க டாய்லெட் பேப்பர் ரோல் தயாரிக்கும் எண்ணம் உருவானதாக ‘டாய்லெட் பேப்பர்மேன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home