4 November 2014

அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!

 
ர்பிஐ அறிவித்த முக்கிய அறிவிப்புகளால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கடந்த நவம்பர் முதல் தேதி முதல் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதனால் ஒருவர், மாதத்துக்கு அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் 3 முறையும் ஆக மொத்தம் 8 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்குமேல் செல்லும்போது 20 ரூபாய் வரை பயன்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தச் சூழலை சமாளிக்க 10 வழிகள் இதோ...

1. உங்களுக்கான ஒரு மாத செலவுகளைத் திட்டமிட்டு அதற்கேற்றவாறு பணத்தை எடுத்து சரியாக செலவு செய்யப் பழகுங்கள். இப்படி செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பரிவர்த்தனைகளுக்கு  மட்டுமே ஏடிஎம் கார்டினை பயன்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.

2. உங்களால் ஒரு மாதத்துக்கான செலவை முழுமையாக திட்டமிட சிரமமாக இருந்தால், ஒரு வாரத்துக்கு ஒருமுறை என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதையும் நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் முதலில் செய்யுங்கள்.

3. தொலைபேசிக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்யுங்கள். ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதன் மூலம் உங்கள் நேரத்தையும் தேவையில்லாமல் ஒரு ஏடிஎம் பயன்பாட்டையும் குறைக்கலாம்.

4. இந்த மாதம் இந்த செலவு மட்டுமே என திட்டமிட்டால், அடிக்கடி ஏடிஎம்மை நாட வேண்டிய அவசியம் இருக்காது.
5. அதிகத் தொகையை எடுக்க நேரிட்டால், வங்கிக்குச் சென்று எடுங்கள். இதன்மூலம் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும்.

6. காசோலைகளைப் பயன்படுத்த கட்டணம் இல்லை என்பதால், காசோலைகள் ஏற்றுக்கொள்ள கூடிய இடங்களில் காசோலைகளைப் பயன்படுத்துங்கள்.

7. அனைவருக்குமே தற்போது சம்பளம் என்பது பெரும்பாலும் நேரடியாக வங்கி கணக்கில் சேரும்படியுள்ளது. உங்கள் சம்பளத்தில் முதன்மை செலவுகள் என்ன என்பதை உணர்ந்து, அதனை செலவு செய்ய ஒரே நேரத்தில் பணத்தை எடுத்து செலவழிப்பது நல்லது. உதாரணமாக வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டனம், பஸ் பாஸ் போன்றவற்றை கணக்கிட்டு ஒரேமுறையில் எடுப்பது சிறந்தது.

8. கல்லூரி மாணவர்கள்தான் இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதற்கு பெரும்பாலும் இன்டர்நெட் பேங்கிங் வசதி இருக்கும். அதனை பயன்படுத்தி தங்களது தேவைகளையும், பயன்பாட்டு கட்டணங்களையும் குறைக்கலாம்.

9.ஷாப்பிங் செய்யும்போது பணத்துக்குப் பதிலாக டெபிட் / கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள். பெரிய மால்களில் ஏடிஎம்கள் வைத்திருப்பார்கள். அவற்றில் சென்று பணத்தை எடுத்து மால்களின் பல கடைகளில் செலவு செய்யாமல், ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலவு செய்வோம் என கணித்து, அந்த தொகைக்கு அந்ததந்த மால்களின் கார்டுகளை பெற்று, அதன்மூலம் ஷாப்பிங்குக்காக பணம் எடுத்து செலவழியும் பயன்பாட்டு கட்டணத்தைத் தவிர்க்க பாருங்கள்.

10. மெட்ரோ நகரங்களில் ஏடிஎம் பயன்பாட்டுக்கு குறைவான வாய்ப்புகள் வழங்கப்படுவதால், நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது பயணிக்கும் இடத்தில் மெட்ரோ எல்லைக்குள் அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தினால் உங்களது வாய்ப்புகளை மிச்சப்படுத்தலாம்.

இந்த பத்து வழிகளை பயன்படுத்தி தேவையில்லாத பயன்பாட்டு கட்டணத்தைக் குறைக்கலாமே!

-ச.ஸ்ரீராம்
 
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home